கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு அளித்த 405 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கை அவர் வாங்க மறுத்துள்ளார்.

405 கோடி ரூபாய் சம்பள உயர்வை உதறி தள்ளிய தமிழன் சுந்தர் பிச்சை..! அளவுக்கு அதிகமா இருக்குனு அதிர்ச்சி தகவல் .! 

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு அளித்த 405 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கை அவர் வாங்க மறுத்துள்ளார். அதற்கு பின்னணியில் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி பார்த்தோமேயானால் ஒருபக்கம் தன்னிடம் போதுமான அளவிற்கு பணம் இருப்பதாகவும் எனவே இந்த பங்கு தேவையில்லை என சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுந்தர்பிச்சை 2015ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை திறமையாக செயல்பட்டு வருகிறார். 

இவருடைய நிர்வாக திறமைக்கு, 2014ஆம் ஆண்டு 1750 கோடி மதிப்பிலான பங்குகளை அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் 2015ஆம் ஆண்டு 1400 கோடி மதிப்பிலான பங்குகள் மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுக்கான நிதியாக 58 மில்லியன் டாலர்கள்.. இந்திய ரூபாயில் சொல்லவேண்டுமென்றால் 405 கோடி வழங்க முன் வந்தது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் என்ற நிறுவனம். ஆனால் இதன் பங்குகளை சுந்தர் பிச்சை ஏற்க மறுத்துவிட்டார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் சுந்தர் பிச்சைக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருவதால், மற்ற ஊழியர்கள் கேள்வி எழுப்பியதே இதற்கு காரணம் என ஒரு பக்கம் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் "எனக்கு தேவையான செல்வம் என்னிடம் இருக்கிறது எனவே இந்த பங்குகள் வேண்டாம்" என சுந்தர் பிச்சை மறுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் குறிப்பிடும்போது, "நிறுவனத்தை பற்றியோ தலைமை செயல் அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சை அவர்களை பற்றியோ எந்த விவரமும் எந்த கருத்தும் வெளிப்படுத்த கூடாது என்பது நிறுவனத்தின் கொள்கையாக உள்ளது எனக்கூறி முடித்துவிட்டு உள்ளார்.இதற்கிடையில் சுந்தர்பிச்சை வேறு ஒரு நிறுவனத்திற்கு மாற உள்ளதாகவும் தகவல் கசிந்த வண்ணம் உள்ளது.