ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு முடிந்த நிலையில் இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 18ம் தேதி நடைபெற உள்ளதால் 13 ஆம் தேதி அதாவது இன்றுடன் அனைத்து வேலைகளையும் முடிக்குமாறு பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விட்டதால் இன்று முதலே மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வரும் ஜூன் மாதத்தின் முதல் வார இறுதி அல்லது இரண்டாவது வாரத்தில் தான் மீண்டும் பள்ளிகள் தொடங்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

அதுவரையில் மாணவர்கள் கோடைவிடுமுறையில் உறவினர் வீட்டிற்கு செல்வதும் பிடித்த இடத்திற்கு சென்று வருவதும் கோடைவிடுமுறையை ஜாலியாக கொண்டாட உள்ளனர். விடுமுறை என்ற உடனே மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.