சென்னை மெட்ரோ பயணிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..! "சுகர் பாக்ஸ்" ரெடி..! 

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பொழுது பயணிகள் நேரத்தை இனிமையாக செலவழிக்க பயணம் முழுவதும் படங்களை பார்க்கும் வண்ணம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதாவது மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது, "சுகர் பாக்ஸ்" என்ற ஒரு செயலியில் wi-fi கனெக்ஷன் மூலமாக பல கேளிக்கை படங்களை பார்க்க முடியும். இந்த செயலியில் உள்ள ஏற்கனவே பதிவிடப்பட்ட படங்கள் காமெடி சீன்ஸ் என அனைத்தும் இருக்கும். மேலும் கன்னடம் மலையாளம் தமிழ் ஆங்கிலம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் காணொளி இருப்பதால் இதனை ஆப் மூலமாக பார்க்கலாம். அல்லது தரவிறக்கம் செய்து கொண்டும் பார்க்கலாம்.

தற்போது சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும். மற்ற வழித்தடங்களில் அடுத்தடுத்த சில தினங்களில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நாம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது டவர் கிடைக்காமல் இருப்பதால் செல்போன் பயன்படுத்துவதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இது போன்ற தருணத்தில் வைஃபை கனெக்ஷன் பயன்படுத்தி மிகவும் ஜாலியாக காமெடி வீடியோக்களை பார்த்துக்கொண்டே பயணம் செய்ய ஏதுவாக இப்படி ஒரு சிறப்பம்சத்தை ஏற்படுத்தியுள்ளது மெட்ரோ நிர்வாகம் என்பது குறிப்பிடத்தக்கது.