Asianet News TamilAsianet News Tamil

சரசரவென குறைந்த தங்கம் விலை..! பெருமூச்சு விடும் மக்கள்..!

கடந்த 10 நாட்களாக ஒரு சவரன் தங்கம் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வந்தது. அதிலும் கடந்த இரு வாரங்களாக தொடர் ஏறு முகத்தில் இருந்து வந்த தங்கம் விலை தற்போது குறைந்து உள்ளது.

sudden fall in gold rate as on 9th sep 2019
Author
Chennai, First Published Sep 9, 2019, 1:14 PM IST

சரசரவென குறைந்த தங்கம் விலை..! பெருமூச்சு விடும் மக்கள்..! 

கடந்த 10 நாட்களாக ஒரு சவரன் தங்கம் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வந்தது. அதிலும் கடந்த இரு வாரங்களாக தொடர் ஏறு முகத்தில் இருந்து வந்த தங்கம் விலை தற்போது குறைந்து உள்ளது.

சென்ற வாரம் முழுவதும் ஒரு சவரன் தங்கம் விலை 30 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையானது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் 33 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை ஆகும் என்ற நிலை உருவாகி உள்ளது.

sudden fall in gold rate as on 9th sep 2019

தங்கத்தின் மீதான இறக்குமதி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்ட பின், 26 ஆயிரம் ரூபாய் என இருந்த ஒரு சவரன் தங்கம் விலை இன்றைய நிலைமைக்கு 30,000 அளவில் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் 

காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு 12 ரூபாய் குறைந்தும், சவரனுக்கு 96 ரூபாய் குறைந்தும் உள்ளது. அதன் படி பார்த்தால்  ஒரு சவரன் தங்கம் விலை 29 ஆயிரத்து 272 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 30 பைசா குறைந்து 51 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios