மாணவர்களே..! எந்த நேரத்திலும் அழையுங்கள் 104 எண்ணிற்கு...! தமிழக அரசு அதிரடி..!  

நாளை மார்ச் ஒன்றாம் தேதி தமிழகம் மற்றும் புதுவை உள்பட12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாணவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என தமிழக சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் 24 மணி நேர தொலைபேசி சேவையான மருத்துவ உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

104 எண்ணிற்கு போன் செய்து இலவச ஆலோசனை பெறலாம். அது உடல் நலம் சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி. உளவியல் ஆலோசனை பெறுவதாக இருந்தாலும் சரி. அதேவேளையில் குறிப்பாக மாணவர்கள் பள்ளி தேர்வை ஏதிர்கொள்ளும் இந்த தருணத்தில் மன அளவில் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த எண்ணிற்கு 24 மணி நேரத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போன் செய்து உங்களுக்கு உண்டான ஆலோசனையைப் பெறலாம்.

தேர்வு நேரத்தில் எப்படி பதற்றத்தை தவிர்க்க வேண்டும்? மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி? நினைவாற்றலை பெருக்குவது எப்படி என பல்வேறு எளிய வழிமுறைகளை பெற முடியும். மேலும் தேர்வு நேரத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள், உறங்கும் நேரம் என அனைத்திலும் கவனம் செலுத்துவது எப்படி என்பது குறித்த ஆலோசனை பெற முடியும். 

இந்த சிறப்பு சேவை மார்ச் மாதம் முழுவதும் செயல்படும். அதே வேளையில் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்திலும் இந்த சேவை கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. தேர்வு பயத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டு அதிக மன அழுத்தம் கொண்ட மாணவர்கள் கட்டாயம் இந்த சேவையை பெற்று வலிமையாக இருக்க முடியும். தேவை என்றால் பெற்றோர்களும் இந்த எண்ணிற்கு போன் செய்து  தங்களது பிள்ளைகளுக்காக ஆலோசனைகளை கேட்டு தெரிந்துகொள்வது நல்லது.