பேருந்து தினம் கொண்டாடிய 39 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் இன்றளவும் கெத்து தான் மக்கள் மத்தியில்.  

அதனையெல்லம் சுக்கு நூறாக உடைக்கும் வகையில் தற்போது பேருந்து தினம் கொண்டாடி மக்களுக்கு இடையாறு ஏற்படுத்தி உள்ளனர் மாணவர்கள். நேற்று முன் தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்  திறக்கப்பட்டன. கல்லூரி திறந்து முதல் நாளே, பேருந்து தினத்தை கொண்டாட மாணவர்கள் அட்டகாசம் செய்தனர். அதில் குறிப்பிட்டு சொல்லும்படியாக பேருந்தின் மீது அமர்ந்து பயணம் செய்த போது , மாணவர்களில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் பேருந்தின் முன் வந்து எதிர்பாராதவிதமாக பிரேக் பிடிக்க, பேருந்து ஓட்டுநரும் பிரேக் போட கொத்தாக விழுந்தனர் மாணவர்கள். 

இதில் 17 பேர்  பச்சையப்பன் கல்லூரி,15 மாணவர்கள் மாநில கல்லூரி, 6 மாணவர்கள் நந்தனம் கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் மீது வழக்கு பதிவு செய்து, பெற்றோர்களை வரவழைத்து அவர்கள் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்தும் இது போன்ற சம்பவங்களில் மீண்டும் ஈடுபட கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பி உள்ளனர் 

மாணவர்கள் என்றால் பொதுமக்களுக்கு  எந்த ஒரு இடையூறும் கொடுக்காமல், பெரும் சக்தியாக வளர வேண்டும் என்றுதான் அனைவரும் நினைகின்றனர். ஆனால் இது போன்ற வேண்டத்தகாத செயலகள்செய்து அவர்களின் மீதான நல்ல பண்பையே சீர்குலைந்து  விடுகின்றனர். உலக அளவில் மெரினா போராட்டம் பேசப்பட்டது என்றால் அது மாணவர்களாளல் தான் என்பது யாராலும் மறுக்க முடியாது.

அதே வேளையில், பேருந்து தினம் என்ற பெயரில் அட்டகாசம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்து, நேற்று முன்தினம் ஒரு விபத்தையே ஏற்படுத்தி உள்ளனர். இதற்கு மக்கள் மத்தியில் கடும்கண்டன குரல் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.