Asianet News TamilAsianet News Tamil

மக்களே..! 2 வாரம் தான் உங்களுக்கு டைம்..! அனைத்து மோட்டார் வாகனத்தில் இந்த ஸ்டிக்கர் கட்டாயம்..!

அனைத்து விதமான மோட்டார் வாகன ஹெட்லைட்டிலும் 2 வாரத்தில் கருப்பு நிற ஸ்டிக்கரை ஒட்ட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

sticker need to place on the vehicle light is compulsary
Author
Chennai, First Published Mar 4, 2019, 4:00 PM IST

அனைத்து விதமான மோட்டார் வாகன ஹெட்லைட்டிலும் 2 வாரத்தில் கருப்பு நிற ஸ்டிக்கரை ஒட்ட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பொதுவாகவே வாகன ஓட்டிகள் தங்கள் வாகன விளக்குகளில் கூடுதல் ரிப்ளெக்டர்கள் மற்றும் ஹாலஜன் பல்புகளை பயன்படுத்துவதால் இரவில் ஒளிஅளவு அதிகரித்து எதிரில் வருவோர் கண்கள் அதிகளவு கூசுகிறது. இதன் காரணமாக, பல விபத்துக்கள் நடைப்பெறுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகன தணிக்கைகள் ஒருபுறம் நடந்தாலும், கன விளக்குகளின் ஒளியை கட்டுப்படுத்த ஹெட்லைட் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.

sticker need to place on the vehicle light is compulsary

இது தொடர்பாக, ராம்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஹெட்லைட்டில் கருப்புநிற ஸ்டிக்கர் ஒட்ட தவறும் உரிமையாளர்களின் வாகனத்தை பறிமுதல் செய்யுங்கள் என்று நீதிமன்றம் கருத்தை தெரிவித்து உள்ளது.

அதுமட்டுமல்லாமல், அனைத்து மோட்டார் வாகன ஹெட்லைட்டிலும் கருப்பு நிற ஸ்டிக்கரை 2 வாரத்தில் ஒட்ட வேண்டும் என்றும், இதனை உறுதிபடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios