மக்களே மகிழ்ச்சியான செய்தி..! போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை மாநில அரசு  குறைத்துக்கொள்ளலாம்..! நிதின் கட்கரி அதிரடி..! 

போக்குவரத்து விதிமீறல்களுக்காக கடுமையான அபராதம் விதிப்பதை குறைப்பது பற்றி மாநில அரசு முடிவெடுக்கலாம் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறலுக்கான மத்திய அரசு கொண்டுவந்த கடுமையான அபராதம் விதிப்பு  முறைக்கு பொது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வந்த நிலையில் அபராதம் குறைப்பு குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என நிதின் கட்கரி அதிரடியாக தெரிவித்துள்ளார்

இது குறித்து பேசிய நிதின் கட் கரி; 

 "அபராதம் விதிப்பது குறித்து குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம்...விபத்துகளில் உயிர் இழப்புகளை தவிர்க்க வேகத்தை அதிகரித்து உள்ளோமே தவிர, அரசின் வருமானத்தைப் பெருக்குவதற்காக இல்லை... சாலை விபத்துகளில் பொதுவாக அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே என வருத்தம் தெரிவித்து உள்ளார்.

அதாவது,  உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் 1000 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதிவேகமாக வாகனத்தை இயக்கினால் ரூ.400  லிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, போதையில் வாகனம் ஓட்டினால் 2,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100 லிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும் பல்வேறு விதிமுறைகள் மற்றும் அபராத முறைகள் அமல்படுத்தப்பட்டு  உள்ளதால் தற்போது சென்னை முழுவதுமே ரோட்டுக்கு ரோடு, தெருவுக்கு தெரு, சிக்னலுக்கு சிக்னல் என எங்கு பார்த்தாலும் போக்குவரத்து போலீசார் உடன் தமிழக காவல் துறையினரும் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்பெல்லாம் பெண்கள் சிறு பிள்ளைகள் என்றால் சரி போகட்டும் என விட்டு விடுவார்கள்... ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பெண்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் 18 வயதிற்கு குறைவானவர்களாக இருந்தாலும், வாகன சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். 

இந்த நிலையில் கடும் அபாராத தொகைக்கு பெரும் அதிருப்தி மக்கள் மத்தியில்  கிளம்பி வந்த நிலையில், அபராதம்  குறைப்பு குறித்து மாநில அரசே  முடிவு செய்துகொள்ளலாம் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.