ஒரு வழியா முடிவு கிடைச்சது...! அரசு அனுமதி கொடுத்ததால் நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அதன் பிறகு எந்தெந்த நிறுவனங்கள் இயக்க  கூடும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

100 நாள் வேலைத்திட்டத்திற்கு அனுமதியளித்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளதால், இந்த வேலைத்திட்டதால் பயன்பெறும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஊரடங்கில் தளர்வுகள்: 

தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என அரசாணை.பிறப்பித்து உள்ளது 

கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகளை தூர்வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி ,நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, பாலங்கள், செங்கல் சூளை பணிகளை மேற்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டு  உள்ளது 

அதே போன்று மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது 

மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

மொபைல் ரீசார்ஜ் கடைகள் இயங்கலாம் என்றும், மின்விசிறி ரிப்பேர் கடைகள் இயங்கவும் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இது கோடைக்காமல் என்பதால் ஏழை எளிய மக்களுக்கு கட்டாயம் மின்விசிறி தேவைப்படும். ஆனால் ஊரடங்கில் தற்போது அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது.

எனவே மக்கள் நலன் கருதி பாதுகாப்பதுடன் வழிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. அதே போன்று மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவருக்கு தேவையான  ஸ்டேஷனரி பொருட்கள் கிடைக்க ஏதுவாக மாணவர்களுக்கான புத்தக கடைகள் நகர்ப்புறப் பகுதிகளிலும் தொடர்ந்து இயங்கலாம் என  அரசு தெரிவித்து உள்ளது.