இட்லி சுவையே இல்லாத உணவு; அதனுடன் சேர்த்து சாப்பிடப்படும் சாம்பார் தான் சுவை தருகிறது என்று ஸ்டாண்ட் அப் காமெடியன் கோவிந்த் மேனன் கூறியிருந்தது சமூக வலைதளத்தில் இருதரப்பு கருத்துகள் குவிய வித்திட்டதையடுத்து, இன்ஸ்டாகிராமில் இட்லி தான் டாப் விவாதமாக இருக்கிறது. 

இட்லி ஆரோக்கியமான ஓர் உணவு. ஆவியில் வேகவைக்கும் உணவு என்பதால் குழந்தை முதல் வயதான முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக இட்லி திகழ்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவின் முதன்மை உணவாக இருக்கிறது.

எளிதில் செரிக்கக்கூடிய உணவு என்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவே இட்லி தான். அப்படியிருக்கையில், ஸ்டாண்ட் அப் காமெடியன் கோவிந்த் மேனன் என்பவர் இட்லி சுவையில்லாத உணவு என்று கூறியிருப்பது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்க குலதெய்வ கோயிலிலிருந்து இந்த 1 பொருளை கொண்டு வந்தால் போதும்.. கஷ்டங்கள் இருந்த இடம் தெரியாம காணம போகும்

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் வீடியோவில் பேசிய கோவிந்த் மேனன், இட்லியில் எந்த சுவையுமே இல்லை. சுவையில்லாத வெள்ளைப்பஞ்சு தான் இட்லி. இட்லிக்கு தொட்டு சாப்பிடும் சாம்பார் தான் சுவையானது என்று கூறியிருந்தார்.

View post on Instagram

கோவிந்த் மேனனின் இந்த கருத்து தென்னிந்திய உணவு - வட இந்திய உணவு என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அவரது கருத்துக்கு ஆதரவாகவும், கருத்துக்கு எதிராகவும் பரபரப்பாக விவாதங்கள் நடந்துவருகின்றன. 

பர்ஸில் இந்த ஒரு பொருளை வைத்தால்.. பணத்துக்கு பஞ்சம் இல்லாம கை நிறைய சம்பளத்தோட நல்ல வேலை கிடைக்கும்..!

இட்லி சுவையானது இல்லையா..? நீ நல்ல இட்லி சாப்பிட்டுருக்காயா..? என் அம்மா சுவையான இட்லி செய்து தருவார்கள். வந்து சாப்பிட்டு பார் என்று இட்லிக்கு ஆதரவாக கொதித்தெழுந்துள்ளார். கோவிந்த் மேனனின் கருத்தால், இட்லி தான் டிரெண்டிங்கில் உள்ளது.