MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • பர்ஸில் இந்த ஒரு பொருளை வைத்தால்.. பணத்துக்கு பஞ்சம் இல்லாம கை நிறைய சம்பளத்தோட நல்ல வேலை கிடைக்கும்..!

பர்ஸில் இந்த ஒரு பொருளை வைத்தால்.. பணத்துக்கு பஞ்சம் இல்லாம கை நிறைய சம்பளத்தோட நல்ல வேலை கிடைக்கும்..!

உங்களுடைய பர்ஸில் இந்த ஒரு பொருளை வைத்து கொண்டால் சீக்கிரம் முன்னேறும் வகையில் நல்ல வேலை கிடைத்துவிடும். 

2 Min read
Author : maria pani
Published : Mar 10 2023, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நல்லதொரு வேலைக்கு சென்று கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புவர். வேலையில்லாத மனிதர்களை இந்த உலகம் மதிப்பதும் இல்லை.. ஏன் குடும்பம் கூட ஏற்றுக் கொள்வதில்லை. அது மட்டும் இல்லாமல் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் ஆண்களை சமூகம் இழிவாக பார்க்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. அதாவது ரூபாய் 20 ஆயிரம் சம்பளம் வாங்குபவர்கள் கூட குறைந்த சம்பளம் வாங்குவதாக கேவலமாக நடத்தப்படுகிறார்கள். பெண் வீட்டார் இதுமாதிரி சம்பளத்தை மதிக்கவே இல்லை என, சமூக வலைதளங்களில் புலம்பாத ஆண்கள் வெகு குறைவு. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இந்த சூழ்நிலையில் நல்ல வேலையும் இல்லாமல், வருமானமும் இல்லாமல் விரும்பிய வேலைக்கும் செல்ல முடியாமல் தவிக்கும் நபர்களுக்கு விடிவு காலம் பிறக்க இந்த பதிவில் சில விஷயங்களை காணலாம் வாருங்கள். நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க மூன்று எளிய பரிகாரங்கள் இருக்கின்றன. வெறும் பரிகாரத்தை செய்துவிட்டு முயற்சி செய்யாமல் சோம்பி திரியக் கூடாது. உங்கள் முயற்சிகள் வெற்றி பெற இறைவனை துணைக்கு அழைக்கவே இந்த பரிகாரங்கள். 

37

என்ன நல்ல காரியத்தை செய்யும் போதும் தடை இருந்தால் முதலில் நாம் உதவிக்கு அழைக்க வேண்டியது விநாயகப் பெருமானை தான், ஆனைமுகத்தோன் எல்லா வினைகளையும் தீர்க்க வல்லவர். ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை அன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று இரண்டு மண் அகல் விளக்குகள் வாங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவிட்டு தோப்புக்கரணம் போட்டு வேண்டிக் கொள்ளுங்கள். விநாயகருக்கு அருகம்புல் வாங்கி சார்த்தினால் தடைகள் நீங்கும் என்றும் ஐதீகம். இதை தொடர்ந்து செய்து வர விநாயகரின் ஆசியில் வாழ்க்கை வசந்தமாகும். “ஓம் கணபதியே நமஹ” எனும் மந்திரத்தை சொல்லி வருவதால் நல்ல வேலை அமையும். அடுத்து இரண்டாவது பரிகாரத்தை காணலாம். 

47

பெரும்பாலும் சிவப்பு வண்ணத்தை அபாயம் என்பதை குறிக்கும் வகையில் தான் சொல்லி கேட்டிருப்பீர்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள்.. உங்கள் பர்ஸில் சின்ன அளவில் சிவப்பு நிற துணியை வைத்து கொண்டால் பல அற்புதங்கள் நடக்கும். அம்பாளை மனதில் வேண்டிக் கொண்டு புதிய ஜாக்கெட் துணியில் ஒரு ஓரமாக வெட்டி அந்த சிவப்பு துணியை பர்ஸில் போட்டு வையுங்கள். இப்படி வெளியே செல்லும்போது வைத்து கொண்டால் நல்லது. நிச்சயமாக உங்களுக்கு நல்ல வேலை கிடைத்துவிடும். வேலை தேடி அலைபவர்கள் கூட நேர்காணலுக்கு செல்லும் போது இதை முயற்சி செய்து பாருங்கள் நல்லது நடக்கும்.  

57

சனிக்கிழமைகளில் காகங்களுக்கு அரிசி சோறு வழங்குங்கள். காகம் சனி பகவானை குறிக்கிறது, இது ஜோதிடத்தில் தொழிலை குறிக்கும். காகத்திற்கு அன்னமிட்டால் சனி சாந்தம் அடைகிறது. சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும். 

இதையும் படிங்க: உங்க குலதெய்வ கோயிலிலிருந்து இந்த 1 பொருளை கொண்டு வந்தால் போதும்.. கஷ்டங்கள் இருந்த இடம் தெரியாம காணம போகும்

67

உங்களுக்கு வெற்றி தடைபட இன்னொரு முக்கிய காரணம் உள்ளது. உங்களுடைய கையெழுத்து தான் அந்த காரணம் என்றால் நம்ப முடிகிறதா? சிலர் கையெழுத்து போடும்போது முற்றுப்புள்ளி வைக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். எப்போதும் கையெழுத்திடும் போது இது மாதிரி முற்றுப்புள்ளி வைக்க கூடாது. அப்படி வைத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காது. அப்படி முற்றுப்புள்ளி வைப்பவராக நீங்கள் இருந்தால்... இனிமேல் அந்த பழக்கத்தை மாற்றி பாருங்கள்; வித்தியாசத்தை கண்டிப்பாக உணர்வீர்கள். 

77

பசுவை பார்க்கும் போதெல்லாம் உங்கள் கையால் ஒரு மஞ்சள் வாழைப்பழம் வாங்கி கொடுங்கள். குருவின் அம்சமுடையது மஞ்சள் நிறம் கொண்ட வாழைப்பழம். குருவின் பார்வை உங்கள் மீது பட்டால் கோடி நன்மைகள் உண்டாகும். கோமாதா லட்சுமி கடாட்சம் கொண்டவள். ஆகவே பசுவிற்கு வாழைப்பழம் கொடுத்தால் வாழ்க்கையில் நல்லதே நடக்கும். இந்த பரிகாரங்களை செய்து பாருங்கள் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். 

இதையும் படிங்க: உங்க கைக்கு பணம் வந்த வேகத்தில்.. ஒன்னும் இல்லாமல் விரயமா போகுதா? அப்போ வீட்டில் இந்த தவறுகளை செய்யுறீங்களா?

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chanakya Niti: கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்? சாணக்கியர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Astrology : தடைகள் நீங்கும், மாற்றம் வரும்: சிம்ம ராசிக்கு ஜூன் மாதம் ஒரு பொற்காலம்!
Recommended image3
Ariyanathaswamy Temple : குபேரனுக்கே செல்வத்தை அளித்த இடம்! நீங்க இழந்த செல்வம் கண்டிப்பா கிடைக்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved