செம்ம டென்ஷனில் ஸ்டாலின்..!  விவாதித்து இருந்தா கூட பரவாயில்லை.... ஆனால் ஏற்கவே மறுத்துட்டாங்க...! 

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப், புதுச்சேரி, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மு.க.ஸ்டாலின் பேசுகையில் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். குடியுரிமை சட்டத்திருத்தத்தால் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறி வருகிறது. மேலும், சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக அறவழியில் நடந்த போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது ஏன்? என பல கேள்விகளை முன் வைத்தார். 

இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரவையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு திமுக  சட்டப்பேரவை விட்டு வெளிநடப்பு செய்தது.

பின்னர் செய்தியாளர்கள சந்தித்த ஸ்டாலின், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க கூட இல்லை... ஒரு வேலை விவாதம செய்வதை பின்னர் நிராகரிக்கப்பட்டு இருந்தால் கூட ஏற்றுக்கொண்டு இருப்போம். ஆனால் விவாதிக்க கூட இல்லை. எனவே தற்போது அடையாள வெளிநடப்பு செய்து உள்ளோம். நிரந்தர வெளிநடப்பு இல்லை... இதை கூட கொட்டை எழுத்தில் திமுக வெளிநடப்பு என கொட்டை எழுத்தில் எழுதிட வேண்டாம் என சற்று ப்ராக்டிகலாக பேசி உள்ளார்.