Asianet News TamilAsianet News Tamil

ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி பெருகி சீக்கிரம் அப்பாவாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

மாதுளையில் அதிக ஆன்டி ஆக்சிடென்டுகள் இருப்பதால், சீரான விந்து அணு உற்பத்தி மற்றும் விந்து அணு ஆரோக்கியம் மேம்படுகிறது. மாதுளையை பழமாக, பழச்சாறாக என்று எந்த வடிவில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

Sperm production for males...Fruit Benefit
Author
Chennai, First Published Oct 1, 2018, 2:12 PM IST

மாதுளம் பழம்.

மாதுளையில் அதிக ஆன்டி ஆக்சிடென்டுகள் இருப்பதால், சீரான விந்து அணு உற்பத்தி மற்றும் விந்து அணு ஆரோக்கியம் மேம்படுகிறது. மாதுளையை பழமாக, பழச்சாறாக என்று எந்த வடிவில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். Sperm production for males...Fruit Benefit

லென்டில்ஸ் 

லென்டில்ஸ் எனப்படும் பருப்பு வகைகள் உடலுக்கு அதிக போலிக் அமில சத்துக்கள் கிடைக்கும். இது விந்து அணு ஆரோக்கியம் மற்றும் நீந்து சக்தியை அதிகரித்து, ஆண்மையை அதிகரிக்க உதவுகின்றன. 

புளுபெர்ரி பழங்கள்! 

புளுபெர்ரி பழ வகைகளால் விந்து அணுக்களின் வடிவம், அளவு, ஆரோக்கியம் மற்றும் எண்ணிக்கை மேம்படுகிறது

தக்காளி 

தக்காளியை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது, ஆண்களின் விந்து அணுக்களின் நீந்து சக்தியை அதிகரித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.Sperm production for males...Fruit Benefit

வால்நட் பருப்புகள்! 

வால்நட் பருப்புகளை ஒரு நாளைக்கு 75 கிராம்கள் என்ற அளவில் எடுத்துக் கொண்டால் விந்து அணுக்களின் எண்ணிக்கையையும் ஆரோக்கியமும் மேம்படுத்தப்படும். உடல் எடை குறைத்தல், உடலின் செயல்பாடுகளை சீரமைத்தல் போன்ற பல விஷயங்களுக்கு உதவுகின்றன. 

பூசணிக்காய் விதைகள்! 

பூசணிக்காய் விதைகள் ஆண்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. பூசணி விதைகளில் அதிகம் ஆன்டி ஆக்சிடென்டுகள் இருப்பதால், விந்து அணுக்களின் நீந்து சக்தி, வடிவம் மற்றும் விந்து அணுக்களின் அளவை சீராக பராமரிக்கிறது. Sperm production for males...Fruit Benefit

டார்க் சாக்லேட்டுகள்! 

இவற்றில் உள்ள சில சத்துக்கள் விந்து அணுக்களின் ஆரோக்கியம் மற்றும் விந்து அணுக்களின் நீந்து சக்தி உள்ளிட்டவற்றை அதிகரிக்க உதவுவதாக கூறப்படுகிறது.

தண்ணீர் 

தினசரி மூன்று முதல் 4 லிட்டர் அளவு தண்ணீர் பருகினால் உடலில் நீர்ச்சத்து மேம்பட்டு விந்து அணுக்களின் ஆரோக்கியம் மற்றும் நீந்து சக்தி மேம்படுத்தப்படும். ஆண்களின் உடலில் வெப்பம் அதிகரித்தால், அதனால் விந்து அணுக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் நீர்ச்சத்து உதவும்.

Follow Us:
Download App:
  • android
  • ios