snapdeal sent a stone instead of mobile

செல்போனுக்கு பதிலாக செங்கலை அனுப்பியுள்ள பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது , சென்னை ஐஐடி யில் படிக்கும் மாணவி நித்திலா தேவி, ஸ்நாப்டீல் இணையத்தளத்தில் மாலூம் மொபைல் போனை ஆர்டர் செய்துள்ளார் .

12௦௦௦ மதிப்பிலான, அந்த மொபைல் போனை பெறுவதற்கு, முன்னதாகவே ஆன்லைனில் பணம் செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இவருக்கு போன் டெலிவரி கவர் வந்துள்ளது.

மொபைல் போனை பார்க்கும் ஆர்வமுடன் கவரை திறந்து பார்க்கும் போது, அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. செல்போனுக்கு பதிலாக அதில் செங்கல் வைத்து, நன்கு கவர் செய்யப்பட்டு வந்துள்ளது.

இதே போன்று இதற்கு முன்னதாக ஐபோனுக்கு பதிலாக மார்பில் கற்கள் வைத்து அனுப்பப்பட்ட சம்பவம் அனைவரும் அறிவர். இந்நிலையில், தற்போது செங்கல் கல்லை வைத்து பார்சல் அனுப்பியுள்ளது ஸ்நாப்டீல் நிறுவனம்.

ஆன்லைன் வர்த்தகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது போன்ற சம்பவங்களும் நடைபெற்றுதான் வருகிறது.