Snakes: வெயில் காலம் வந்துவிட்டாலே பூச்சிகள், பாம்புகள் போன்றவை குளிர்ச்சியான இடம் தேடி வீடுகளில் நுழைகின்றனவாம். 

வெயில் காலம் துவங்கி விட்டாலே, சூரியனில் வெயில் நம்மை சுட்டெரிக்க ஆரம்பித்துவிடும். அதிலும், இந்த வருடம் வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது. இது போன்ற சூழ்நிலைகளில், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, குளிர்ச்சியான இடங்களை தேடி செல்வது மனித இயல்பாகும். இது மனிதர்களுக்கு மட்டுமின்றி, விலங்குகள், பூச்சிகள் என அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். 

குளிர்ச்சியான இடம் தேடி வீடுகளில் நுழையும் நாக பாம்புகள்:

ஆம், வெயில் காலம் வந்துவிட்டாலே பூச்சிகள், பாம்புகள் போன்றவை குளிர்ச்சியான இடம் தேடி அலையுமாம். இன்றைய கால கட்டத்தில் காடுகள் இருந்த இடங்களில் எல்லாம் அளிக்கபட்டு எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால்,பாம்புகள் இருக்க இடம் இன்றி குளிர்ச்சியான இடம் தேடி வீடுகளில் நுழைகின்றனவாம். 

உங்கள் வீட்டில் பெரியவர்கள், குழந்தைகள் இருந்தால் கூடுதல் பாதுகாப்புடன் இருப்பது அவசியம். எனவே, நாக பாம்புகளிடமிருந்து உங்களை தற்காத்து கொள்வது அவசியம். 

நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 9 வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து விட்டு இன்றே செயல்படுத்துங்கள்.

1. ஜன்னல்களை அதிக நேரம் திறந்து வைக்காதீர்கள். ஏனெனில், நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டி உங்கள் வீட்டினுள் நுழையும். 

2 தூங்க செல்வதற்கு முன்னர், படுக்கையை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் சுருட்டி வைக்கும் பாய், போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.

3. பொதுவாக கிராம புறங்களில், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் சமயத்தில், குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்து கொள்வோம். குழந்தைகளை மரத்தின் கீழே தொட்டில் கட்டி போடுவோம். இனி அப்படி செய்யும் போது மரத்தின் கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று நோட்டமிடுங்கள். 

4. அதேபோன்று, எப்பொழும் வீட்டின் முன் பக்க கதவு, பின் பக்க கதவு உள்ளிட்டவற்றை திறந்து வைப்பதை தவிர்க்கவும். குறிப்பாக, மாலை வேளைகளில் வீட்டில் கதவுகளை திறந்து வைப்பதால், பாம்புகள் அமைதியாக அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.

5. அதேபோன்று, வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழக்கம் இருப்பவர்கள் அவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், மாலை வேளையில் கொடிய விஷம் கொண்ட பாம்புகள்அதிக அளவில் சுற்றி திரியும். 

6. பாம்பு விரட்டும் தூள் வாங்கி அதை உங்கள் வீட்டை சுற்றியுள்ள முற்றத்தில் தூவிவிடுங்கள். அது உங்கள் வீட்டிற்குள் பாம்புகள் நுழைவதனை 90% குறைத்துவிடும்.

7. உங்கள் வீட்டில் முட்டை, முடுச்சுகள் போன்றவற்றை அதிகம் சேர்த்து வைக்காதீர்கள். அதேபோன்று, உங்கள் வீட்டை சுற்றி ஏதேனும் புதர்கள், குப்பைகள் இருந்தால் அகற்றிச் சுத்தப்படுத்துங்கள். ஏனெனில், கொடிய பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கிக் கிடக்கின்றன.

8. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே உலா வரும். அதுமட்டுமின்றி, உங்கள் ஷூ ரேக் போன்றவற்றை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். ஷூ போடும் போது, நன்றாக உதறி விட்டு போடுங்கள்.

9. ஒருவேளை உங்கள் வீடுகளில் பாம்புகள் நுழைந்துவிட்டால், விரட்ட முயற்சிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில் அதிக வெப்பத்தின் காரணமாக பதுங்க இடம் தேடும் பாம்புகள் அதிக கோபம் கொண்டிருக்கும். நம்மைத் துணிச்சலுடன் தாக்க முற்படும்.

மேலும் படிக்க....Summer drink: வெயிலில் உங்களை ஜில்லுன்னு இருக்க வைக்கும் மசாலா மோர்...வீட்டிலேயே தயார் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!

எனவே, மேற்சொன்ன விஷயங்களை படித்து தெரிந்து கொண்டு உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இவை உங்களை ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ள உதவும்.