Summer drink: கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே, சூரியன் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விடும். அதிலும், இந்த வருடம் வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது.
கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே, சூரியன் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விடும். அதிலும், இந்த வருடம் வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது. எனவே, மண்டைய பிளக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, ‘ஜில்லுன்னு எதையாவது குடிச்சா நல்லா இருக்கும்’ என்ற அடிக்கடி தோன்றும்.

மசாலா மோர்:
எனவே இதுவரை அடிக்கடி குடித்து வந்த டீ, காபியை கைவிட்டு உடல் சூட்டை தணிக்கும் குளிர்ச்சியான ஆரஞ்சு, சாத்துக்குடி ஜூஸ், கரும்பு சாறு, வாட்டர் மெலன் உள்ளிட்ட சிறப்பு பானங்கள் குடிக்க தயாராவோம்.
அந்த வகையில், நன்மை குளு குளு வென வைத்திருக்க இயற்கை பானங்களில் மோருக்கு எப்போதும் தனி இடம் உண்டு. ஏனெனின், தயிரில் இருந்து பெறப்படும் மோர் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய ஒரு குளிர் பானமானாக உள்ளது. எனவே, அவற்றில் சுவையான ‘மசாலா மோர்’ எப்படி தயார் செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
இஞ்சி – 1/4 கப்
கொத்தமல்லி – 2 டீஸ்பூன்
மோர் மிளகாய் – 1
கெட்டித் தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 1/2 கப்
கறிவேப்பிலை – தேவையான அளவு
மசாலா மோர் தயார் செய்யும் முறை:
முதலில் ஒரு கப் தயிரை எடுத்து, மத்தை அல்லது மிக்ஸ் கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். பின்னர், அதில் தேவையான தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி போன்றவை சிறிய துண்டுகளாக நறுக்கி கலந்து வைத்த மோரில் சேர்த்து கொள்ளளவும்.

பிறகு ஒரு கடாயினை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் அவற்றை பாத்திரத்தில் வைத்துள்ள மோரில் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இப்போது, வெயிலில் உங்கள் உடல் சூட்டை தணிக்கும் மசாலா மோர் தயார். அவற்றை நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் குடித்து மகிழலாம்.
