முழு பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கி.. முடியாமல்... அப்படியே வெளியேற்றிய பாம்பு..! 

பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவுதான் முயற்சி செய்து வந்தாலும் இன்றளவும் ஆங்காங்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது காணமுடிகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பிளாஸ்டிக் பொருட்கள் மனிதர்களுக்கு மட்டுமல்லாது மற்ற பிற விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கு பெரும் உதாரணமாக சமீபத்தில் கூட ஒரு மாட்டின் வயிற்றில் இருந்து திக எடைகொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டது நமக்கு தெரிந்த ஒன்றே.

இந்த நிலையில் ஒரு பாம்பு ஒன்று முழு பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கி... பின்னர் செரிக்க முடியாதலால் தவித்த அந்த பாம்பு மீண்டும் அந்த பாட்டிலை வெளியே தள்ளுகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாக வெளி வருகிறது. இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு மனிதர்களுக்கு மட்டுமல்லாது... சிறு சிறு உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை கருத்தில் கொண்டு, இனியாவது பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துதல் வேண்டும் என்பதே அனைவரின் கருத்து.