இந்த வீடியோ இவ்வளவு பிரபலமாகும் என நம்பவில்லை... ஸ்மித்திகாவின் தாயார்

திட்டாமல் அடிக்காமல் குணமாய் சொல்லனும் என கொஞ்சும் குரலில் தாய்க்கு அறிவுரை கூறிய சிறுமி யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்கிற விவரம் வெளியாகியுள்ளது. மேலும் அந்த சிறுமியின் மற்ற டிக் டாக் மியூசிக்கலி வீடியோக்கள், சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

"திட்டாமல் அடிக்காமல் குணமா வாய்ல சொல்லணும்" யூகேஜி சிறுமி ஒருவர், தன் தாய்க்கு அறிவுரை கூறிய வீடியோ  ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரவியது. கொஞ்சும் மழலைக் குரலில், தாய்க்கு அறிவுரைக் கூடிய இந்த சுட்டிக் குழந்தை யார்? என்று வீடியோவை பார்த்த அனைவரும் கேட்டு வந்தனர். 

இந்த நிலையில், அந்த சுட்டிக்குழந்தையின் பெயர் ஸ்மித்திகா என்பதும், திருப்பூர் மாவட்டம் மண்ணரை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் - பிரவீனா தம்பதியரின் மகள் என்பது தெரியவந்தது. 

ஒரே வீடியோவில் சமூக வலைத்தளத்தில் பிரபலமான ஸ்மித்திகா குறித்து, அவரது தாயார் கூறும்போது, ஸ்மித்திகா சுட்டிப்பெண். மெச்சூர்டா நடந்துக்குவா. எங்களுக்கே அவதான் அட்வைஸ் செய்வாள். எமோஷனல் டைப்பும் கூட. சில நேரங்களில் அவள் செய்யும் சுட்டித்தனங்களை செல்போனில் வீடியோவாக எடுத்து அவளது அப்பாவிடம் காட்டுவேன்.

பள்ளி சென்று விட்டு வீடு திரும்பிய ஸ்மித்திக்கா, சிற்றுண்டி சாப்பிடாமல் வந்தது குறித்து கேட்டேன். அதுக்கு ஒரே அழுகை... பதில் சொல்லாமல் அழுதுகிட்டே இருக்கியேன்னு சும்மா இலேசாகத்தான் அடித்தேன்.

அதுக்குத்தான், குணமா வாய்ல சொல்லணும்னு அட்வைஸ் செய்ய ஆரம்பிச்சுட்டா. பள்ளியில் டீச்சரையே ஆன்ட்டி என்றுதான் கூப்பிடுவா. ஸ்மித்திகா செய்யும் சுட்டித்தனங்களை, வீடியோ எடுத்து அவரது தந்தையிடம் காண்பிப்பேன். அன்றும் அப்படித்தான் அதனை படம் பிடித்து பிரகாஷிடம் காண்பித்தேன். 

இந்த வீடியோவை, அவரது நண்பர் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. ஆனால், இந்த வீடியோ இவ்வளவு பிரபலமாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்று ஸ்மித்திகாவின் தாய் பிரவீனா கூறியுள்ளார்.தற்போது ஸ்மித்திகாவின் மற்றொரு வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஸ்மித்திகா, தன்னை இவ்வளவு தூரம் பிரபலமாக்கிய அனைவருக்கும் நன்றி என்று அந்த விடியோவில் ஸ்மித்திகா 
கூறியுள்ளார்.