Sleeping Positions To Stay Healthy The Best And Worst Ways To Sleep During The Night
நீங்கள் உங்கள் உடலுக்கு சரியான அளவு தூக்கம் அளிக்காவிட்டால், அது உங்கள் ஒட்டு மொத்த நலத்தையும் பாதிக்கப் போகிறது. தூக்க குறைவு உங்கள் கவனம், மனநிலை, விழிப்புணர்வை பாதிப்பது மட்டுமன்றி மேலும் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பாதித்து தோல் மற்றும் முடி பிரச்சினைகளுக்கும் வழி வகுக்கும். மோசமான தூக்கம் உங்கள் தூக்கத்தை பாதிக்கும் வழிகள் பற்றி இங்கே.
உங்கள் உறக்க நிலை போல் நீங்கள் ஓய்வெடுக்கும் நேரத்தின் எண்ணிக்கையும் மிக முக்கியமானது. ஆழ்ந்த உறக்கத்திற்கு சரியான அமைப்பும் தேவைப்படுகிறது. இங்கே எப்படி உங்கள் தூங்கும் நிலை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே எது சரியான தூங்கும் நிலை? நீங்கள் பக்கவாட்டில் உறங்குவதை தேர்ந்தெடுத்தால், இடது பக்கமாக தூங்குவது உண்மையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு பலனளிப்பதாக இருக்கும். டாக்டர் அம்பன்னா கெளடா, ஆலோசகர், உள்மருந்து, போர்டிஸ் மருத்துவமனை, கன்னிங்ஹாம் ரோடு, பெங்களூரு உங்கள் இடது பக்கத்தில் தூங்குவதால் பலன்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.
அமில எதுக்கலை தடுக்கிறது : இடதுபுறமாக உறங்குவது உங்கள் வயிற்று அமிலத்தை உங்கள் உணவுக் குழாயில் தள்ளுவதற்கு பதிலாக வயிற்றின் குழியில் தள்ளுகிறது. உங்கள் வலது புறமாக தூங்குவது இந்த பிரச்சினைக்கு வழி வகுக்கும். எனவே, ஒரு காரமாண் உணவை சாப்பிட்ட பின், உங்கள் நெஞ்செரிச்சல் அல்லது அமிலத் தன்மையை தடுக்க, இடது புறமாக தூங்குவது சிறந்தது.
குறட்டை விடுதலிலிருந்து நிவாரணம் : உங்கள் முதுகு புறமாக தூங்குவது, தொண்டை மற்றும் நாக்கின் தசைகளை தொண்டையை நோக்கி தள்ளுகிறது. இது மூசுசு பிரச்சினைகளை ஏற்படுத்தி, குறட்டை விடுவதில் முடிகிறது. உங்கள் வாழ்வு பக்கம் சாய்ந்து படுத்தல், இந்த தசைகளை நடுநியலையில் வைப்பதால், குறட்டை விடுவதை தடுக்கிறது. இந்த் நிலை தடங்கலான தூக்கத்தால் மூச்சு நின்று பின் விடுபவருக்கும் பயனளிக்கிறது. நீங்கள் குறட்டையை நிறுத்த இந்த உடற்பயிற்சிளை கூட முயற்சிக்கலாம்.
செரிமானத்தை மேம்படுத்துகிறது உங்கள் இடது புறமாகத் தூங்குவது கழிவுகளை சிறுங்குடலிலிருந்து பெருங்குடலுக்கு எளிமையாக நகர அனுமதிக்கிறது. இது சிறந்த செரிமானத்தை விளைக்கிறது
ஆரோக்கியமான நினநீர் அமைப்பு: உங்கள் இடது பக்கமாக தூங்குவது உடலுக்கு நச்சுகள், கழிவுகள் மற்றும் நினநீர் திரவத்தை வடிகட்ட போதுமான நேரம் அளிக்கிறது. இது ஏனென்றால், இடது நிணநீர் பக்கம் ஆதிக்கமுள்ளது மற்றும் கழிவுகளின் ஓட்டத்தை இடது பக்கத்தில் அமைந்துள்ள மார்பு குழாய்களுக்கு ஊக்குவிக்கிறது
ஓட்டத்தை அதிகரிக்கிறது: இடதுபுறமாக படுத்திருப்பது கர்ப்பிணி பெண்களுக்கு கருவுக்கு உகந்த ரத்த ஓட்டம், இதயம் மற்றும் சிறுநீரகங்களுக்கு ஆகியவற்றிக்கு பயனளிக்கிறது. ஒட்டம் அதிகரிப்பதால், அது சுருள் சிறை நாளங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கும் நன்மை அளிக்கிறது. ஏன் உங்கள் பின்புறமாக கர்ப்பத்தின் போது படுக்கக்கூடாது என்பது பற்றி.
பிற நன்மைகள் : உங்கள் இடது பக்கமாக தூங்குவது உங்கள் இதய ஆரோக்கியம், மண்ணீரல் ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்தும், முதுகு மற்றும் கழுத்து வலியை தடுக்கிறது மற்றும் உங்கள் முதுகுத் தண்டு அழுத்தத்தையும் நிவாரணம் செய்கிறது.
