மழை வர போது.. துண்டுகள், பெட்ஷீட்களில் துர்நாற்றம் அடிக்காமல் இருக்க சிம்பிளான 10 டிப்ஸ்!!
Monsoon Tips : மழைக்காலத்தில் துண்டுகள் மற்றும் பெட்ஷீட்களில் துர்நாற்றம் இல்லாமல் வைத்திருக்க 10 குறிப்புகள்.
மழைக்காலம் ஆரம்பமாகப் போகிறது. இந்த பருவத்தில், வீடுகள் மற்றும் துணிகளில் ஈரப்பதம் காரணமாக பூஞ்சைகள், துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அந்த வகையில், இந்த ஈரமான பருவத்தில் உங்கள் துண்டுகள் மற்றும் பெட்ஷீட்களில் துர்நாற்றம் இல்லாமல் புதிதாக வைத்திருக்க சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றினால் போதும். அவை நிச்சயமாக உங்களுக்கு உதவும்.
மழைக்காலத்தில் துண்டுகள் மற்றும் பெட்ஷீட்களில் துர்நாற்றம் இல்லாமல் வைத்திருக்க 10 குறிப்புகள் :
1. கற்பூரம் :
கற்பூரம் இந்து மதத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இது மழைக்காலத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்று மற்றும் துர்நாற்றத்தை நீக்குவதிலும் உதவும் தெரியுமா? இதற்கு உங்கள் வீடுகளில் இருக்கும் எல்லா ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி, கற்பூரத்தை ஏற்றி, சுமார் 15 நிமிடம் அதன் புகையை வீட்டில் பரவும் படி செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் துர்நாற்றம் வீசாமல், வாசனை சூழ்ந்து இருக்கும்.
2. பேக்கிங் சோடா :
நீங்கள் உங்களது துண்டுகள் மற்றும் பெட்ஷீட்களை துவைக்கும் போது, தண்ணீரில் 1 ஸ்பூன் தேக்கரண்டி கழுவி கலந்து, அதில் அவற்றை அலசுங்கள் பிறகு மீண்டும் சாதாரண தண்ணீரில் துண்டுகள் மற்றும் பெட் சீட்களை அலசி காய போடுங்கள். பேக்கிங் சோடா தண்ணீரில் இப்படி அவற்றை அலசும் போது, அவற்றில் துர்நாற்றம் அடிக்காது, அதற்கு பதிலாக அவை புதிதாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
3. அயர்ன் செய்யவும் :
நீங்கள் உங்களது துண்டுகள் மற்றும் பெட் சீட்களை துவைத்த பிறகு அதை நீங்கள் அயன் செய்தால், அவற்றில் இருந்து துர்நாற்றம் வீசாது. அதற்கு பதிலாக அவை வாசனையாகவும், புதிதாகவும் இருக்கும்.
இதையும் படிங்க: மழை காலத்தில் பாம்புகளை விரட்ட இந்த 5 செடிகளை வீட்டில் வளர்த்தால் போதும்!!
4. காற்றோட்டம் அவசியம் :
மழை காலத்தில் உங்கள் வீட்டு ஜன்னல்கள், கதவுகள் எப்போதும் மூடியே இருந்தால், வீட்டில் துர்நாற்றம் வீசத் தொடங்கும். எனவே, ஜன்னல் மற்றும் கதவுகளை அவ்வப்போது திறந்து வையுங்கள். இதனால் சுத்தமான காற்று உள்ளே பரவி, வீட்டில் துர்நாற்றத்தை நீக்கும்.
5. வினிகர் :
பேக்கிங் சோடாவை போல உங்களது துண்டுகள் மற்றும் பெட் சீட்களை துவைப்பதற்கு வினிகரை பயன்படுத்தலாம். வினிகர் உங்களது துண்டுகள் மற்றும் வெற்றிக்களில் அடிக்கும் துர்நாற்றத்தை நீக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி துணியும் மென்மையாகும்.
6. நன்கு காய வைக்கவும் :
மழைக்காலத்தில் வெற்றிகள் மற்றும் துண்டுகளை சரியான முறையில் காய வைக்கவில்லை என்றால், துர்நாற்றம் வீசுவது உறுதி. எனவே, அவற்றை நன்கு வெயிலில் காய வைத்து, பிறகு மடித்து வையுங்கள். அப்போதுதான் அவற்றில் இருந்து துர்நாற்றம் அடிக்காது.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் வீட்டில் நசநசவென ஈரப்பதமாக இருந்தால் 'இந்த' விஷயங்களை பண்ணுங்க..
7. வாஷிங் மிஷினில் அதிகம் போடாதே :
நீங்கள் துணிகளை வாஷிங் மிஷினில் அளவுக்கு அதிகமாக போட்டால், வாஷிங் மெஷின் சரியாக அவற்றை சுவைக்காது துணிகளில் இருக்கும் அழுக்குகள் அப்படியே இருக்கும். இப்படி அழுக்குடன் இருக்கும் துணியை நீங்கள் பயன்படுத்தினால் துணிகளில் இருந்து துர்நாற்றம் கண்டிப்பாக வீசும் எனவே வாஷிங்மெஷினில் ஓவர்லோட் செய்வதை தவிர்க்கவும்.
8. ஈரப்பதம் உள்ள இடத்தில் வைக்காதே :
மழைக்காலத்தில் நீங்கள் துண்டுகளை ஒருபோதும் குளியலறை போன்ற அதிக ஈரப்பதம் உள்ள இடத்தில் வைப்பது தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, நீங்கள் நல்ல காற்று வரும் இடத்தில் வையுங்கள். அப்போதுதான், அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசாது.
9. Dryer Balls :
நீங்கள் வாஷிங் மிஷினில் துண்டுகள் மற்றும் பெட் சீட்களை துவைக்கும் போது டிரையல் பால்ஸ் பயன்படுத்தினால் குறைந்த நேரத்தில் நல்ல முறையில் அவை துணிகளை துவைக்கும். இதன் மூலம் துணிகளில் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படுகிறது.
10. சிலிக்கான் பாக்கெட்டுகள் :
சிலிக்கான் பாக்கெட்டுகள் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, துண்டுகள் மற்றும் பெட்ஷீட்கள் வைத்த இடத்தில் இவற்றை வைத்தால், அவற்றை உலர் மற்றும் ஈரப்பதம் இல்லாமல் வைத்திருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D