மழை காலத்தில் பாம்புகளை விரட்ட இந்த 5 செடிகளை வீட்டில் வளர்த்தால் போதும்!!
Plants To Prevent Snakes : மழைக்காலங்களில் வீட்டிற்குள் பாம்புகள் வராமல் இருக்க இந்த 5 செடிகளை மட்டும் வீட்டில் வைத்தால் போதும். அதிலிருந்து வரும் வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது.
கோடை வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருகின்றது. மேலும், பல இடங்களில் ஆங்காங்கே பருவமழை பெய்து வருகின்றது. மழைக்காலம் கோடை வெப்பத்தில் இருந்து நமக்கு நிவாரணம் தந்தாலும், பல நோய்களையும் கூடவே கூட்டிக் கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த பருவத்தில் பல வகையான பூச்சிகள் மற்றும் ஆபத்தான பாம்புகள் கூட வீட்டிற்குள் நுழைந்துவிடுகிறது.
அதுவும் குறிப்பாக, வீட்டைச் சுற்றி தோட்டம், வாய்க்கால், குளம், ஆறு, வயவெளிகள் உள்ளவர்கள் கண்டிப்பாக பாம்பு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆனால், மழைக்காலங்களில் வீட்டிற்குள் பாம்புகள் வராமல் இருக்க சில செடிகளை மட்டும் வீட்டில் வைத்தால் போதும் தெரியுமா? ஏனெனில், அதிலிருந்து வரும் வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது. இதனால், அது வீட்டிற்குள் வர முயன்றாலும் அந்த செடிகளில் இருந்து வரும் வாசனையால் அவை ஓடி விடும். எனவே, இன்று இந்த கட்டுரையில் பாம்புகள் வீட்டிற்குள் வராமல் தடுக்க உதவும் அந்த 5 செடிகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் துணியில் இருந்து நாற்றம் அடிக்குதா? உங்களுக்காக நச்சுனு 8 டிப்ஸ் இதோ!
பாம்புகள் வராமல் தடுக்கும் 5 செடிகள்:
புழு மரம் :
பாம்புகள் வராமல் தடுப்பதில் புழு மரம் வல்லவை. இதனை ஆங்கிலத்தில் வார்ம்வுட் (Warm Wood) எனக் குறிப்பிடுவார்கள். இந்த செடியில் இருந்து வரும் வாசனை தான் பாம்புகள் வராமல் தடுக்கும். ஏனென்றால் பாம்புகளுக்கு இந்த வாசனை சுத்தமாக பிடிக்காது. இந்தச் செடி நர்சரிகளில் கூட கிடைக்கும்.
வேம்பு :
வேப்ப மரம் இயற்கை கொசு விரட்டி என்பதை நாம் அறிந்ததே. அதைப் போலவே பாம்புகளுக்கும் வேம்பு கொஞ்சம் ஒவ்வாமைதான். கசப்பான சுவையுடைய வேம்புக்கு கீழ் பாம்புகள் இருப்பதில்லை. இதன் நறுமணம் கூட பாம்புகளுக்கு பிடிக்காது. வீட்டுக்கு முன் அல்லது வீட்டுக்கு அருகில் வேப்ப மரம் வளர்ப்பது நல்லது. மரம் வளர்க்க முடியாதவர்கள் தண்ணீருடன் வேப்ப எண்ணெய் கலந்து பாட்டிலில் ஊற்றி வீட்டை சுற்றி ஸ்ப்ரே செய்யலாம். இந்த வாசனைக்கு பாம்புகள் வீட்டை அண்டாது. மழை காலத்தில் வீட்டில் ஜன்னல் கதவுகளில் வேப்ப இலைகளை சொருகி வைப்பதும் பலனளிக்கும்.
இதையும் படிங்க: மழைகாலம் வந்தாச்சு..கை, கால் வலி குத்தல் குடைச்சல்... காரணம்? சூப்பரான தீர்வு இங்கே..!
சாமந்தி செடி :
வீட்டில் தோட்டம் இருப்பது பாம்பு மாதிரியான பூச்சிகளை ஈர்க்கும் என்ற பயம் பலருக்கும் இருக்கும். ஆனால் மஞ்சள் சாமந்தி பூ செடியை வீட்டில் வளர்த்தால் அந்த பயம் இருக்காது. பாம்பு உங்கள் வீட்டை நெருங்காது. இந்த வாசனை அவற்றிற்கு பிடிப்பதில்லை.
கற்றாழை :
முட்களுடன் இருப்பதால் கற்றாழையை பலர் வீட்டில் வளர்க்க தயங்குவார்கள். ஆனால் இந்த மாதிரி செடிகளுக்கு தான் ஈர்க்கப்படுவதில்லை. வீட்டில் கற்றாழை இருந்தால் அங்கு வராது. ஜன்னல்கள், பிரதான வாசல், பால்கனி ஆகிய பகுதியில் கற்றாழையை வைத்து வளர்க்கலாம்.
டெவில் பெப்பர் :
டெவில் பெப்பர் எனும் பிசாசு மிளகு பாம்புகளுக்கு எதிரி. இந்த தாவரத்தின் வேர்களில் வினோதமான நறுமணம் வரும். இந்த வாசனை பாம்புகளுக்கு எரிச்சலூட்டும். இதன் காரணமாக பாம்புகள் இந்த தாவரம் இருக்கும் திசை பக்கமே வருவதில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D