துளசியை யார்...யாரெல்லாம் சாப்பிட கூடாது...பக்க விளைவுகள் பற்றி தெரியுமா?

துளசியை அளவுக்கு அதிகமாக நாம் எடுத்துக்கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும்? வாருங்கள் பார்க்கலாம்.

Side effects of basil

துளசி, பல்வேறு நோய்களில் இருந்து விடுதலை தரும் குணம் கொண்ட மூலிகையாகும் .இருந்தும் 'அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு' என்ற பழமொழி நாம் உணவாக உட்கொள்ளும் அனைத்து உணவுபொருளுக்கும் பொருந்தும். எனவே, துளசியை அளவுக்கு அதிகமாக நாம் எடுத்துக்கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும்? வாருங்கள் பார்க்கலாம்.

துளசியின் பக்க விளைவுகள்: 

Side effects of basil

நீரிழிவு நோயாளிகள் மற்றும் குறைந்த இரத்த அழுத்தத்திற்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் துளசி சாப்பிட்டால், அது சர்க்கரையின் அளவினை மேலும் குறைய செய்யும். அது மட்டும் இன்றி, தலைச்சுற்றல், வலிப்பு, குமட்டல், விரைவான இதய துடிப்பு, வாய் மற்றும் தொண்டை வீக்கத்திற்கு வழிவகுக்கலாம்.

துளசியில் 'யூஜெனோல்' எனும் ஒரு சக்திவாய்ந்த கலவை பொருள் உள்ளது. எனவே, நீங்கள் அளவுக்கு அதிகமாக துளசி சாப்பிடும் போது, அது உங்களுக்கு விஷமாக மாறுகிறது. மேலும், இருமல், சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வருதல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

அடிக்கடி துளசி சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்களை குறைத்து, கரு உருவாவதில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோன்று, இளம்பெண்கள் மாதவிடாய் நேரங்களில், துளசி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அசெட்டமினோஃபென் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் தொடர்ந்து துளசியை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். ஏனெனில், இரண்டுமே வலி நிவாரணிகளாகும். இரண்டையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளும்போது அவை கல்லீரலின் செயல்பாடுகளை பாதிக்கும்.

துளசியில் இருக்கும் முக்கியமான ஒரு பொருள் எஸ்ட்ராகல். எனவே, நீங்கள் அதிக அளவு துளசியை உட்கொண்டால் எஸ்ட்ராகல் அளவு அதிகரித்து உடலில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

Side effects of basil

துளசியில் பாதரசம் இருப்பதால் மென்று சாப்பிடும் போது, உங்கள் பற்களை கறைபடுத்தும். அதேபோல் உங்கள் பற்களின் நிற மாற்றத்திற்கும் துளசி வழிவகுக்கும். மேலும், துளசி இலைகள் இயற்கையில் அமிலத்தன்மை கொண்டவை. அது பற்களின் எனாமலை பாதிக்கும்.

கர்ப்பமாக இருக்கும் அல்லது கர்ப்பமாகுவதற்கு முயற்சிக்கும் பெண்கள் துளசியை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது இனப்பெருக்க திறனை பாதிக்கும். அதுமட்டுமின்றி, தாய் மற்றும் குழந்தைக்கு நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தி, முதுகு வலி, வயிற்றுப் போக்கு, அதிக ரத்தம் வெளிப்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று துளசி எடுத்து கொள்வது நல்லது.

துளசியை மட்டும் தனியாக உட்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படும்.ஆனால், அதே வேளையில் உரிய உபபொருட்கள் சேர்த்து சாப்பிடும்போது அரிய மருந்தாக துளசி விளங்குகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios