Asianet News TamilAsianet News Tamil

ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்கணுமா? இந்த 5 ஐட்டம் போதும்

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள்  ஒரு சில உணவுப்பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்வது தான் காரணம் என  நமக்கே தெரிந்தாலும், தவிர்க்க  முடியாத சில பல  காரணத்தால் கண்டதை  உண்டு உடல் எடையை அதிகரிக்க செய்கிறோம்.

Should you lower your cap in a week? This 5 item is enough
Author
Chennai, First Published Sep 10, 2018, 3:52 PM IST

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள்  ஒரு சில உணவுப்பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்வது தான் காரணம் என  நமக்கே தெரிந்தாலும், தவிர்க்க  முடியாத சில பல  காரணத்தால் கண்டதை  உண்டு உடல் எடையை அதிகரிக்க செய்கிறோம். இது ஒரு பக்கம் இருக்க மாறி வரும் லைஃஸ்டைல் உணவுப் பழக்கத்தையே  மாற்றி விட்டது. 

சரியான நேரத்திற்கு சாப்பிடாமல், எப்போதும் வேலை என  கலப்பிட உணவை ,  ஆரோக்கியம் இல்லாத  இடத்தில் அமர்ந்து உண்டு  தேவை இல்லாத உடல் பிரச்சனையை  ஏற்படுத்திக் கொள்வது தான்  நம்மவர்கள்  என்பது  நமக்கே  தெரியும்.

இதெல்லாம் ஒரு பக்கம்  இருந்தாலும் அதிக கலோரி உடைய உணவை உண்பதால் தான் உடல் எடையும் அதிகரித்து விடுகிறது. உடலில் தேவை இல்லாமல் கொழுப்பு அதிகரித்து அதன் மூலம் இதய அடைப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்சனையும் எளிதில் வரும் வாய்ப்பு உள்ளது.

சரி வாங்க  மிக குறைவான கலோரி  உள்ள சில உணவு பொருட்கள் என்ன என்பதை பார்க்கலாம். இதனை தினமும் உண்டு  வந்தால் ஒரே வாரத்தில்  எப்படி  உங்கள் உடல்  எடை  குறைகிறது  என்பதை  பாருங்கள்.

ஒரு முழுமையான பர்க்கோளில்   34 கலோரி மட்டுமே உள்ளது. 

காளிஃபிளவரில்  24 கலோரி மட்டுமே  உள்ளது. 

வெள்ளரிக்காயில் 22 கலோரி மட்டுமே  உள்ளது. 

காளான்களில்  2 கலோரி மட்டுமே உள்ளது. 

பாப்கார்ன் சாதாரண ஒரு பாக்கெட்டில் 32 கலோரி மட்டுமே  உள்ளது. 
 
நூறு கிராம் குடை மிளகாயில் 31  கலோரி மட்டுமே  உள்ளது.  எனவே  இந்த உணவு  வகைகளை  பயன்படுத்தி  தினமும்  இதனை உண்டு வந்தால்  ஒரே வாரத்தில் உடல் எடை  நன்கு குறைவதை காணலாம்.
 
இது தவிர மற்ற பல  உணவு  பொருட்களும் குறைந்த கலோரியில் உள்ளது . அதனை தேர்வு செய்து சரியான அளவீட்டில் எடுத்துக் கொண்டால் ஆக சிறந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios