உயர்நீதிமன்றம் அதிரடி..! அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுத்தால் வாகனம் பறிமுதல்..! உஷார்..! 

சட்ட விரோதமாக நிலத்தடி நீரை எடுத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் கௌரிவாக்கத்தில் விவசாயத்திற்கு வழங்கிய மின்சாரத்தை வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்துவதாக, நாகேஸ்வர ராவ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கு  மீதான  விசாரணை இன்று நீதிபதிகள் மணிக்குமார் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

விசாரணைக்கு பின், முறையாக அனுமதி பெற்று நிலத்தடி நீர் எடுக்கிறார்களா ? இல்லையா..? என்றும் நிலத்தடி நீர் எடுப்பது பற்றி முழுமையான அறிக்கையை ஜூலை 1 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சிபுரம் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

மேலும்  சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்தால் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தும், சட்ட விரோதமாக நிலத்தடி நீரை எடுத்து செல்லும் மோட்டார் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.