தண்ணீர் பஞ்சம் : DRUM - களுக்கு பூட்டு போட்டு பலத்த பாதுகாப்பு..!  ஒரு குடம் தண்ணீர் கூட திருடு போகக்கூடாது..! 

கோடை வெயிலின் தாக்கத்தால் தற்போது கடும் வறட்சி நிலவி வரும் இந்த தருணத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலத்திலும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான வறட்சியின் காரணமாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக பில்வாரா என்ற பகுதியை சேர்ந்த பெண்கள் தங்கள் வீட்டில் தண்ணீரை பிடித்து வைத்திருக்கும டிரம்-களுக்கு பூட்டு போட்டு தண்ணீரை பாதுகாக்கின்றனர். அந்தப் பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் லாரிகள் வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தெரிவிக்கையில் "எங்கள் வீட்டில் தங்கம் வெள்ளி என சிறுசிறு பொருட்கள் இருந்தாலும் அதை விட மிக முக்கியமானது குடிப்பதற்கு தண்ணீர். இந்த கோடை வெயிலின் வறட்சியில் சிக்கித் தவிக்கும் எங்களுக்கு பொன் பொருளை விட தண்ணீரே அதிக விலை மதிப்புள்ள பொருளாக தோன்றுகிறது.

எனவேதான் இது போன்று பத்திரமாக பூட்டி வைத்து வேறு யாரும் தண்ணீரை எடுத்துக் கொள்ளாதவாறு பாதுகாத்து வருகிறோம். இந்த தண்ணீரை பயன்படுத்தி தான் அடுத்த பத்து நாட்களுக்கு நாங்கள்  உபயோகிக்க முடியும் இல்லை என்றால், சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என வருத்தம் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில்தான் குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் மட்டுமே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என அடிக்கடி செய்திகளில் கண்டாலும் வட நாட்டிலும் பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர் என்பது இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.