வெடித்தது எரிமலை..!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் எரிமலை வெடிக்க தொடங்கி உள்ளதால் அங்குள்ள மக்கள் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கி உள்ளது. சுலவேசி தீவில் உள்ள மவுண்ட் சினாபங் எரிமலை சீற்றத்துடன் சாம்பலை வெளிப்படுத்தி வருகிறது. இந்த எரிமலை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று வெடிக்க தொடங்கி, இதிலிருந்து வெளிவரும் பெரிய அளவிலான நெருப்புக்குழம்பு மற்றும் புகையினால் வானில் 6500 அடிக்கும் மேலாக புகை பரவி காணப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கக்கூடிய மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அரசு தரப்பில் இருந்து எரிமலை அருகே யாரும் செல்ல வேண்டாம் என்றும் புகையில் இருந்து தப்பித்துக் கொள்ள மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் விமானம் இயக்குவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்களை வேறு இடத்திற்கு இடம் பெயர  வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், தற்போது எரிமலைக்கு அருகே வசிக்கும் மக்கள் வேறு ஒரு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.