shocking news for brokers said registeration dept

பத்திரப்பதிவு துறை முக்கிய அறிவிப்பு...!வாயடைத்து போன இடைத்தரகர்கள்..!

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இடைத்தரகர்களுக்கு தடை விதிக்கப்பட்டு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது பத்திரபதிவு துறை

மார்ச் மாதம் முதல் சொத்து வாங்குபவர்கள்,விற்பவர்கள் மட்டுமே சார்பதிவாளர் அலுவலகங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது 

பத்திரப்பதிவு நடைபெறும் பகுதியில் சொத்து விற்பவா், வாங்குபவா் மட்டுமே அனுமதிக்க படுவார்கள் என்றும், பத்திரப்பதிவுத் துறையில் இடைத் தரகா்கள் குறுக்கீட்டால் பதிவு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் பாரபட்சம் காட்டப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது பத்திரபதிவுதுறை

 மேலும், வரும் மார்ச் மாதம் முதல் இடை த்தரகர்கள் பத்திரப்பதிவின் போது கட்டுபாட்டை மீறி உள்நுழைந்தால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது

இந்த செய்தி காரணமாக, இடை தரகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.