வெளியானது அறிவிப்பு..! செப்டம்பர் 15 இல் மீண்டும் தபால் துறை தேர்வு...! 

வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி தபால் துறை தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 14ஆம் தேதி தேர்வு நடத்தி,ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு மீண்டும் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.தபால் துறையில் பதவி உயர்வு பெறுவதற்காக தேர்வு நடத்தப்பட்டது.

இந்த வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருந்து தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த பிரச்சனை நாடாளுமன்றத்தில் வலுவாக எழுப்பப்பட்டதால் தேர்வு ரத்து செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

பின்னர் இது குறித்து பதில் அளித்த மத்திய அரசு, "அந்தந்த மாநில மொழிகளிலும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்படும்" என உறுதி அளித்ததை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு செப்டம்பர் 15-ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதாவது இந்தி பேசும் மாநிலத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும், இந்தி அல்லாத மாநிலங்களில் ஆங்கிலம், இந்தி மற்றும் அந்தந்த மாநில மொழிகளிலும் வினாக்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.