மாணவர்களே என்ஜாய் செய்தது போதும்...! நாளை பள்ளிகள் திறப்பு..! தயாராக இருங்க ..! 

அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்த மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. 

விடுமுறை முடிந்து திறக்கப்படும் முதல்நாளே பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதன் பின்னர் ஜனவரி 3ம் தேதி வரை அதாவது இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால் முதல் நாளே பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட இருக்கின்றது. இதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான அளவு புத்தகங்களை மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலமாக ஏற்கனவே அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட்ட பின்னர் அது குறித்த விவர அறிக்கையை முதன்மை கல்வி அதிகாரிகள் வரும் ஜனவரி 8ம் தேதிக்குள் பள்ளி கல்வித் துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு அனைத்து புத்தகங்களும் சரியான நேரத்தில் வழங்கப்படும் என்பதை உறுதி செய்ய முடியும். மேலும் காலதாமதம் ஆகாமல் பாடங்கள் விரைவில் முடிக்கப்படும் வகையில் பள்ளிக் கல்வித்துறை இந்த முயற்சியை எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.