கொரோனா எதிரொலி..! மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி,கல்லூரி, திரை அரங்குகள் இயங்காது..! 

கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் மார்ச் 31ம் தேதி வரை திரையரங்குகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், திரை அரங்குகள் இயங்காது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அவர்களில் 4 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து இருப்பதாகவும் ஒரு குட் நியூஸ் தெரிவித்து உள்ளது மத்திய அரசு.

நிலைமை இப்படி இருக்கும் போது தற்போது ஆந்திராவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் ஒரு விதமான பதற்றம் நிலவி வருகிறது. ஆனால் போதுமான அளவுக்கு விழிப்புணர்வு இருந்தாலே கொரோனாவை கட்டுக்குள் வைத்து விடலாம் என தொடர்ந்து அரசு அறிவுறுத்தி வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க நிறைய இடங்களில் மக்கள் மாஸ்க் அணிந்து செல்கின்றனர். ஆனால் மாஸ்க் மட்டுமே கருணாவை தடுக்க முடியுமா என்றால் இல்லை. ஒருவரிடம் இருந்து சற்று தள்ளி இருப்பது மிகச் சிறந்த வழி. அதற்கு அடுத்தபடியாக மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் வேண்டும், மேலும் நம் கைகளை முகத்தின் அருகில் கொண்டு செல்வது கூடாது. இவ்வாறு செய்து வந்தாலே கொரோனாவால் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 

இந்த நிலையில் பாதுகாப்பது நடவடிக்கைக்காக டெல்லியில் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகள் திரை அரங்குகள் இயங்காது என டெல்லி முதல்வர் தெரிவித்து உள்ளார்.