Shani Peyarchi 2022: கும்ப ராசியில் செவ்வாயும் சனியும் இணைவது சுப யோகம் பிறக்கும். இருப்பினும், இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகக் கருதப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரங்கள் படி, நவக்கிரகளில் முக்கியமான கிரகங்களாகக் கருதப்படும், சனியும் செவ்வாயும் பகையாளிகள் ஆவார்கள். இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணி தான் மிகவும் சிக்கலானது, சவால்கள் நிறைந்தது ஆபத்தானதாகவும் இருக்கும்.
ஏப்ரல் 29ம் தேதி முதல் மே-17ம் தேதி வரை செவ்வாயும், சனியும் ஒரே ராசியில் ஒன்றாக இணைகிறது. ஏப்ரல் 29ம் தேதி காலை 09.00 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் கிரகம் ஏற்கனவே இந்த ராசியில் அமர்ந்திருக்கிறது. கும்ப ராசியில் செவ்வாயும் சனியும் இணைவதால் அசுபமாக கருதப்படுகிறது. எனவே அடுத்த மே 17 வரை குறிப்பிட்ட இந்த 3 ராசிகள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
கன்னி:
கன்னி ராசிக்கு சனி-செவ்வாய் இணைப்பு ஆறாம் வீட்டில் நடக்கிறது. இந்த வீடு சோர்வு, ஆபத்து மற்றும் விபத்து ஆகியவற்றின் வீடாக கருதப்படுகிறது. எனவே இந்த நேரத்தில், உடல் நலத்தில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். பணியிடத்தில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சாப்பிடும் விஷயத்தில் கவனமாக இருக்கவும். செலவும் அதிகரிக்கலாம். மேலும், வெளியில் உண்பதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
கும்பம்:
சனி-செவ்வாய் கும்ப ராசியில் ஒரே நேரத்தில் இணைவதால், உங்களுக்கு இன்று முதல் பிரச்சனைகள் ஆரம்பமாகும். உங்கள் ராசிக்கு, இந்த சனி, செவ்வாய் கூட்டு கோபம், எரிச்சல் போன்ற பாதிப்புகள் இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பது அவசியம்.
கடகம்:
சனி - செவ்வாய் இணைப்பு கடக ராசிக்கு எட்டாம் வீட்டில் நடக்கிறது. எட்டாவது வீடு, வயது, ஆபத்து மற்றும் விபத்து ஆகியவற்றின் வீடாக கருதப்படுகிறது. எனவே, இந்த ராசிக்காரர்கள் வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். எதிலும், ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டும். எப்போதும் விழிப்புடன் இருங்கள்.
