Asianet News TamilAsianet News Tamil

OLX இணையதளத்தில் "வல்லபாய் படேல் சிலை" விற்பனை என விளம்பரம் கொடுத்த மர்மநபர்! அடுத்து நடந்தது என்ன?

குஜராத்தில் பிறந்த இவருக்கு,குஜராத்திலேயே சிலை வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அப்போது முதல்வர் பதவி வகித்து வந்த பிரதமர் மோடி. அதன்படி கடந்த 2013ம் ஆண்டு நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் சாதுபெட் என்ற இடத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
 
sardar statue sale advertisement in olx and police enquiry started regading on  this issues in gujrat
Author
Chennai, First Published Apr 6, 2020, 12:42 PM IST

OLX இணையதளத்தில் "வல்லபாய் படேல் சிலை" விற்பனை என விளம்பரம் கொடுத்த மர்மநபர்! அடுத்து   நடந்தது என்ன? 

வல்லபாய் படேலின் சிலையை விற்பனை செய்யவுள்ளதாக இணையதளத்தில் விளம்பரம்: மர்மநபர் குறித்து குஜராத் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் இரும்பு மனிதர் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரப்படுகிறது. இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த இவர், இந்தியாவில்ஒருங்கிணைப்பு மற்றும் சீரமைப்பில் பெரும் பங்காற்றி  உள்ளார்.

குஜராத்தில் பிறந்த இவருக்கு,குஜராத்திலேயே சிலை வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அப்போது முதல்வர் பதவி வகித்து வந்த பிரதமர் மோடி. அதன்படி கடந்த 2013ம் ஆண்டு நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் சாதுபெட் என்ற இடத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

sardar statue sale advertisement in olx and police enquiry started regading on  this issues in gujrat

'ஒருமைப்பாட்டு சிலை'

ஒருமைப்பாட்டிற்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு 182 மீட்டர் உயரத்தில் சிலை வடிவமைத்து சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி கடந்த 2018ம் ஆண்டு அவரது சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். உலகிலேயே மிக உயர்ந்த சிலையாக உள்ள  படேலின் சிலை உள்ளது. மேலும் வெளிநாட்டினர் இந்தியா வரும் போது படேலின் சிலையை பார்வையிட அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர்.

இந்த ஒரு இலையில் கொரோனா பாதிப்பு பல்வேறு நாடுகளில் ஏற்பட்டு தற்போது இந்தியாவிலும் அதிக  அளவில் பரவி வருவதால் நிலைமையை சமாளிக்க பிரதமர் மோடி, நாட்டு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என தெரிவித்து இருந்தார். அந்த ஒரு தருணத்தில், சமூகவலைத்தளங்களில் வைரலாக ஒரு மீம்ஸ் பரவியது அதில் அதன் படி படேல் சிலையை விற்றுவிடலாம் என கிண்டல் செய்து இருந்தனர் 

இந்த நிலையில் இதை பார்த்த யாரோ ஒரு மர்ம நபர் ஒருவர் OLX இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். அந்த விளம்பரத்தில் இந்தியாவில் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ உள்கட்டமைப்புக்கு அரசுக்கு பணம் தேவைப்படுவதாலும், மருத்துவமனை கட்டவும் இந்த சிலையை ரூ.30 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து, ஒற்றுமை சிலையின் தலைமை நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், குஜராத் போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஒரு விதமான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios