sani stothram gayathri mantram to rectify problems

கிரகங்களில் வலிமையானவர், தர்மாதிகாரி, எம தர்மராஜனின் சகோதரர் இப்படி எல்லாச் சிறப்புகளையும் பெற்றவர் சனைஸ்சர பகவான். அவருக்கு பயப்படாதவர்கள் கிடையாது. காரணம், நீதிமானுக்கு பயப்பட்டுத்தானே ஆகவேண்டும். 

கிரகங்களில் மெதுவாக நகரும் சனி, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அவரை மந்தன் என்று ஜோதிட சாஸ்திரம் அழைக்கிறது. 

மந்த கதியில் சென்றாலும், மெதுவாக நகர்ந்தாலும், இந்தப் புவியில் உள்ள மனிதர்களின் வாழ்வில் பலன்களை தமக்கே உரிய பாணியில் தந்தே தீருவார். எனவே தான் அவரை மகிழ்விக்க, அவருக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று பெரியோர்கள் விதித்திருக்கிறார்கள். 

வரும் மார்கழி மாதம் 4ம் நாள் (19.12..2017) வளர்பிறை பிரதமையும் செவ்வாய்க் கிழமையும் மூல நட்சத்திரமும் கூடிய நன்னாளில் காலை 9.59க்கு சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.

தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலம் இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருள் வழங்குவார். தனுசு ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் கும்ப ராசியையும் - ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும் - பத்தாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார். சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தைவிட இருக்கும் இடத்தின் பலமே அதிகம். 

முக்கியமான இந்த சனிப் பெயர்ச்சியால் நாம் நலன்களைப் பெற வேண்டுமானால், கீழ்க்காணும் சனீஸ்வர காயத்ரி மந்திரங்களைச் சொல்லி, அருகில் உள்ள சிவன் கோயில்களில் உள்ள சனீஸ்வரர் சந்நிதியை வணங்குவது, அல்லது நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரரை வலம் வந்து வணங்குவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். 
இதனை தந்த்ர காயத்ரி என்பார்கள்.

சனி காயத்ரீ மந்திரங்கள்...

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி 
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி 
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி 
தன்னோ சனைச்சர ப்ரசோதயாத்!

ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி 
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி 
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!

சனி பகவானுக்கான பலன் தரும் ஸ்லோகம்

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!

அதாவது, கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவரே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாக சஞ்சரிப்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன் என்பது இதன் பொருளாகும்.

சனி பகவானுக்கான பொதுவான பரிகாரங்கள்:

தினமும் வினாயகர் - ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும்.
தினமும் வினாயகர் அகவல் - ஹனுமான் சாலீசா - சுந்தர காண்டம் ஆகியவற்றைப் பாராயணம் செய்யலாம். 
தேவைப்படும் போது மஹாகணபதி ஹோமம் அல்லது பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்வது நல்ல மாற்றம் தரும்.
தினமும் முன்னோர் வழிபாட்டைச் செய்வது - குறைந்தபட்சம் அமாவாசை தினத்திலாவது முன்னோரை வழிபடுவது பலம் சேர்க்கும்.
தினமும் காகத்துக்கு சாதம் வைப்பது மிகச் சிறந்த பரிகாரம்.