Sani Peyarchi 2022: கர்ம பலன்களைத் தரும் சனிபகவான் ஏப்ரல் 29-ம் தேதி தனது மூல ராசியான கும்ப ராசியில் பிரவேசித்துள்ளார். இன்றைய 12 ராசிகளின் பலன்களை பற்றி பார்ப்போம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நீதியின் கடவுளான சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். சனி பகவான் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 29-ம் தேதி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்துள்ளார். மேலும், அவர் ஜூலை 12 ஆம் தேதி 75 நாட்கள் வரை கும்ப ராசியில் இருப்பார்.
சனி பகவானின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், சிலருக்கு இது மகிழ்ச்சியையும், சிலருக்கு பிரச்சனைகளையும் கொடுக்கும். அப்படி யார் யாருக்கு என்னென்ன பலன்கள் எனபதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடக்கும். உழைப்பாளிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கும். உத்தியோகத்திலோ, வியாபாரத்திலோ நல்ல வெற்றி கிடைக்கும். பணம் வருவதற்கு புதிய வழிகள் அமையும். பதவி உயர்வு இருக்கலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றம் அனுகூலமான பலன்களை கொடுக்கும். எதிர்காலம் பற்றிய கவலை மேலோங்கி காணப்படும். பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால் அனைத்து வேலைகளும் நிறைவேறும். வியாபாரிகளும் அதிக லாபம் பெறுவார்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு சனியின் ராசி மாற்றம் நல்லது. கும்ப ராசியில் 75 நாட்கள் தங்கி இருப்பதால்
குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேரத்தின் மீது கவனம் தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு சனியின் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். எதிலும், முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று நிறைவேறும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சனியின் ராசி மாற்றம் காரணமாக, இந்த நேரத்தில் நீங்கள் வியாபாரத்தில் நல்ல பணம் சம்பாதிக்கலாம். தொழிலில் வெற்றி பெறலாம். பணியிடத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். எதையும் சாமர்த்தியமாக இருந்தால், அதனால் மன நிம்மதி பெறலாம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு சனியின் ராசி மாற்றம் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நல்ல பலன் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு சனியின் ராசி மாற்றம் காரணமாக குடும்ப சூழ்நிலைக்கு அனுசரித்து செல்வது நல்லது. மனதிலிருக்கும் இறுக்கமான நிலை மாறும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகளை அடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி அடையலாம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலான முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குலாபம் கிடைக்கும். உங்கள் வேலையில் சாதக பலன்களை பெறலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு:
சனியின் ராசி மாற்றம் உங்களுக்கு ஏழரை சனியில் இருந்து விடுதலை கிடைத்தது. தடைப்பட்ட அவர்களின் பணிகள் இப்போது நிறைவேறும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பதவி உயர்வு, மரியாதை கிடைக்கும். உங்களுக்கு 75 நாட்களுக்கு சனி மட்டுமே பலன் தரும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனியின் ராசி மாற்றம், உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய முதலீடுகள் செய்வதற்கு நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பிறக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனியின் ராசி மாற்றம் காரணமாக, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய யோசனைகளால் வெற்றி பெறுவீர்கள். அதே சமயம் பணியிடத்தில் மூத்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு சனியின் ராசி மாற்றம் அனுகூல பலன் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் நீங்கி சமரசம் உண்டாகும். இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
