திருமங்கலம் அருகே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கிராமத்திற்குள் நுழைபவர்கள், காலணி மற்றும் குடைகளை பிடித்து நுழைய கட்டுப்பாடு காலம் காலமாக நீடித்து வருகின்றது.அக்கிராமத்தில்  உள்ளவர்கள் கைரேகை பார்த்து வாக்கு சொல்லும் தெய்வ அருள் பெற்றவர்கள்.இதனால் கிராமம் முழுவதும் காட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாடு பரம்பரையாக அப்பகுதியினர் கடைபிடித்து வருவது இந்த காலத்தில் வினோதமாகவே இருக்கிறது. 

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த காங்கேயநத்தம் கிராமத்தில், பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர் .இந்த கிராமத்தில் 50 குடியிருப்புகள் கொண்ட கம்பளத்து நாயக்கர் என்ற சமூகத்தைச்சேர்ந்தவர்கள் ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக பசுமாடுகள் வைத்து நடத்தி ,தொழுவோம் வைத்து செயல்பட்டதால் அப்பகுதியை தெய்வமாக வழிபட்டனர். அதன்பேரில் இன்றுவரை அப்பகுதியில் தெய்வங்கள் வசிக்கும் பகுதியாக கருதப்படுகிறது. ஆனால் அப்பகுதியில் நுழைபவர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகள் எவராக இருந்தாலும் , அவர்கள் தங்களது காலனி மற்றும்  குடைகளை அகற்றியும், வேட்டி மடித்து கட்டாமல் நுழையவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது .

ஏனெனில் அப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவருக்குமே வாக்கு சொல்லும் அருள் பெற்றுள்ளதாக இந்நாள்வரை கருதப்படுகிறது. அதாவது அப்பகுதி குடியிருப்புவாசிகள் , அப்பகுதிக்குள் நுழைபவர்கள் மீது வாய்மொழியில் ஏதாவது தெரிவித்தால் அது நடக்கும் என்பது ஐதீகம் . அது நல்ல வார்த்தைகளாக இருந்தாலும் சரி, கெட்ட வார்த்தைகளைக் இருந்தாலும் சரி , அப்பகுதியில் வசிப்பவர்கள் தெய்வ வாக்கு அளிப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் நுழைபவர்கள் மற்றும் காலனி மற்றும் குடைகளை கழற்றி வைத்தும், பயபக்தியுடன் வேட்டியை மடித்து கட்டாமல் நுழைவதற்கு கட்டுப்பாடு இன்றுவரை உள்ளது. நாகரிகங்கள் நாளுக்கு நாள் மாறி வரும் காலகட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பரம்பரை வழக்கத்தை மாறாமல் பின்பற்றும் கிராம மக்களால் பெருமை கொள்ள வைக்கிறது