போரில் உயிரே போனாலும் கவலையில்லை! ரஷ்ய வீரர்களுக்கு அந்நாட்டு அரசு செய்து கொடுத்த வசதி!
உக்ரைனில் போராடும் ரஷ்ய ராணுவ வீரர்கள், தங்கள் விந்தணுக்களை இலவசமாக சேமித்து வைக்கலாம் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு தொடங்கி நடந்து இப்போது வரை உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. புத்தாண்டு அன்று உக்ரைன் ராணுவம் ரஷ்யா ராணுவ படையினர் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் சுமார் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இது மாதிரியான சோக நிகழ்வுகள் மத்தியில், ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு அரசாங்கம் புதிய நடவடிக்கை ஒன்றினை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
அதன்படி,போரில் ஈடுபடும் ரஷ்ய வீரர்கள் தங்கள் விந்தணுக்களை உறைய வைத்து சேமிக்கலாம். இதற்கு கட்டணங்கள் கிடையாது. போரில் பல கடினமான சூழல்கள் நிலவும். உயிருக்கும் உத்திரவாதம் கிடையாது. அங்கு நின்று கொண்டிருக்கும் வீரர்களின் வாழ்க்கை நிச்சயமில்லாதது. தாங்கள் நேசிக்கும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் விட்டு விட்டு போர்களத்தில் போராடுகின்றனர். எல்லா சூழல்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.
உயிரை துட்சமாக்கிவிட்டு தங்களை தாக்க வரும் படைகளை தங்கள் நாட்டு எல்லைக்குள் விடாமல் வீரதீரமாய் சண்டையிடுகின்றனர். இதில் பல போர்வீரர்கள் இறந்தும்விடுகின்றனர். அதன் பிறகு அவர்களது குடும்பம் நிர்கதியாகிவிடுகிறது. அக்குடும்பத்தினருக்கு தங்கள் மகனோ, கணவரோ போரில் இருந்து திரும்பி வரமாட்டார் என்பது ரணமான விஷயம். நிலைகுலையும் அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சி கேள்விக்குறியாகும்.
இதையும் படிங்க; உடல் எடையை குறைக்குறேனு மாட்டீக்காதீங்க! கார்போஹைட்ரேட் இல்லாமல் சாப்பிடுவதால் தலை தூக்கும் பிரச்சனைகள்!
சில வீரர்கள் தங்கள் வாழ்க்கையின் முழு மகிழ்ச்சியையும் அனுபவிக்காமலேயே மண்ணுலகை பிரிகின்றனர். சில வீரர்கள் கை, கால்களை இழந்தது வீட்டிற்கு திரும்புகிறனர். சிலர் அதன் பிறகு குழந்தையை பெற்றெடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் அவரது சந்ததி முடிவுக்கு வருகிறது. இதனை தவிர்க்க சில ரஷ்ய வீரர்கள் தங்கள் விந்தணுக்களை முன்பே சேமித்து வைக்கின்றனர்.
இந்த விந்தணு சேமிக்கும் முறை கேட்க எளிமையாக இருந்தாலும் நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது. இதை புரிந்து கொண்ட ரஷ்ய அரசு தங்கள் வீரர்கள் விந்தணுக்களை இலவசமாக சேமித்து வைக்கலாம் என நம்பிக்கை அளிக்கும் விதமாக தெரிவித்துள்ளது. இந்த வீரர்களின் விந்தணுக்கள் பாதுகாப்பாக கிரையோபேங்குகளில் (உறைநிலை வங்கி) வைக்கப்படுகிறது. ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கருவுறுதல் சிகிச்சையின்போது விந்தணுக்களை இலவசமாக கிரையோபேங்கில் இருந்து பெற முடியும்.
சிறப்பு இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்கும் ரஷ்ய கூட்டமைப்பு கோரிக்கையை ஏற்று ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம், இலவச விந்தணு சேமிக்கும் முறைக்காகவும், அதன் பாதுகாப்பிற்காகவும் 2022-2024 ஆண்டு வரையில் நிதி ஒதுக்கவும் முடிவு செய்துள்ளது. இது அந்நாட்டு சுகாதார காப்பீட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதாகவும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டு அதிபர் புதின் 3 லட்சம் பேரை போருக்கு அழைத்திருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க; பயங்கரமா அடிபிடித்த பாத்திரம் நொடியில் பளபளக்கணுமா? கஷ்டபடாம கறையை போக்க டிப்ஸ்!