ஒரே நாளில் சவரனுக்கு ரூ.296  உயர்வு..! பொதுமக்கள் அதிருப்தி ..!

தங்கம் சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூபாய் 296 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக இறங்குமுகமாகவும் சில நேரங்களில் ஏறுமுகமாகவும் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 296 உயர்ந்து உள்ளது. 

அதன் படி,

22 கேரட் ஒரு கிராம் தங்கம் - 3,091 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது, கிராமுக்கு 37 ரூபாய் உயர்ந்தும், சவரனுக்கு 296 ரூபாய் உயர்ந்து, சவரன் ரூபாய் 24,728 - கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி 30 பைசா உயர்ந்து, 40 ரூபாய் 40 பைசாவிற்கும் விற்கப்படுகிறது.