தமிழகத்தில் காலியாக உள்ள 1000 VAO பணியிடங்களை நிரப்ப ஓய்வு  பெற்ற VAO க்களை வைத்து தொகுப்பூதிய முறையில் நிரப்ப அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இளைஞர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பெரும்பாலான இளைஞர்கள் அரசு வேலை பெற வேண்டும் என்பதற்காக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு எப்போது வெளியாகும்..? எப்போது தேர்வு எழுதலாம் என கோச்சிங் சென்டருக்கு சென்று பயிற்சி எடுத்து வருகின்றனர்.


 
அதிலும் குறிப்பாக, VAO பணி என்றால், அதற்காக அதிக நேரம் செலவு செய்து இன்றைய இளைஞர்கள் எப்படியாவது கிராம நிர்வாக அலுவலர் பணியை பெற வேண்டும் என முயற்சி செய்கின்றனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணமாக, G.O Ms 70 - காலியாக உள்ள 1000 VAO பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களை கொண்டு ரூ.15000/- தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசாணை வெளியிட்டு உள்ளது அரசு

இதன் மூலம் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கனவு  கனவாகவே தான் இருக்குமோ என்ற  நிலை உருவாகி உள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள ஜாக்டோ ஜியோ அரசாணை 56 க்கு எதிராக போராடிய போது, புரிந்துணர்வு இல்லாமல், "நான் அரை சம்பளத்திற்கு பணிபுரிகிறேன், நான் கால் சம்பளத்திற்கு பணிபுரிகிறேன் என்று அறிக்கை விட்டீர்கள்.. இளைஞர்களே... தற்போதைய உங்கள் நிலைக்கு வருந்துகிறோம்" என தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.