கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி யூடியூபில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பதிவிடப்பட்டுள்ள வீடியோக்களை நீக்க அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே 90 லட்சம் வீடியோ பதிவுகளை youtube இல் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும் மேலும் இந்த வீடியோக்களை நீக்க நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சுந்தர் பிச்சை.

குறிப்பாக மக்களிடையே இனவெறியை தூண்டும் வகையிலும் மதத்தாலும் மொழியாலும்  பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பதிவிடப்பட்டுள்ள பதிவுகள் மற்றும் மற்ற வெறுப்புணர்வை தூண்டும் பல்வேறு வீடியோக்கள் யூடியூபில் இடம்பெற்றுள்ளதாக பல குற்றச்சாட்டுகள் வெளியானது. இதனை அடுத்து இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இனிவரும் காலங்களில், தரமான மக்களுக்குப் பயன்படக்கூடிய வீடியோக்கள் மட்டுமே யூடியூபில் பதிவேற்றம் செய்ய முடியும் என்பது கூடுதல் தகவல். இது ஒரு பக்கம் இருக்க யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தும் கண்காணிக்க படுவதால் யூடியூப் சேனலை நம்பி இருப்பவர்கள் மிகவும் கவனமாக செயல்படுவது ஆக