Asianet News TamilAsianet News Tamil

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தால் பலன் கொடுக்காது... ஆய்வில் பகீர் தகவல்..!

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து பலனளிப்பதற்கான சான்று எதுவும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Remtacivir drug does not work for corona treatment ... study information Pakir
Author
tamil nadu, First Published Apr 13, 2021, 11:03 AM IST

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து பலனளிப்பதற்கான சான்று எதுவும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 7 நாட்களாக பரவல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு கரோனா பரவல் தொடங்கியபோது ஏற்பட்ட பாதிப்பை தாண்டி ஒரு நாள் தொற்று என்பது 7 நாட்களாக தொடர்ந்து உயர்ந்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 879 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,71,058 ஆக அதிகரித்துள்ளது.

Remtacivir drug does not work for corona treatment ... study information Pakir

இந்நிலையில், கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு ரெம்டெசிவிர் மருந்து நல்ல பலனை தருவதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் இந்த மருந்துக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரெம்டெசிவர் மருந்துகள் பதுக்கப்படுவதாகவும், அதிகவிலைக்கு விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன் அளிக்கும் என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.Remtacivir drug does not work for corona treatment ... study information Pakir

ரெம்டெசிவிர் மருந்தை 5 முறை ஆய்வு மேற்கொண்டதில், இவ்வாறான முடிவுகள் வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios