Asianet News TamilAsianet News Tamil

'என் மனைவி லெஸ்பியன்னு தோனுது.. அவர் பண்ற காரியங்கள் அப்படி இருக்கு' குழம்பும் வாசகருக்கு பதில்!!  

Relationship Advice : எப்போதும் கணவன், மனைவிக்கு இடையே குழப்பங்கள் நீடிப்பது தவறு. எதையும் பேசி முடிவெடுப்பது நல்லது. அதிலும் அந்தரங்க விஷயங்களில் வெளிப்படையாக இருக்கவேண்டும். 

relationship advice man thinks his wife is lesbian in tamil mks
Author
First Published Jun 28, 2024, 9:15 PM IST

எப்போதும் கணவன், மனைவிக்கு இடையே குழப்பங்கள் நீடிப்பது தவறு. எதையும் பேசி முடிவெடுப்பது நல்லது. அதிலும் அந்தரங்க விஷயங்களில் வெளிப்படையாக இருக்கவேண்டும். 

"எனக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை எங்களுக்குள் பிரச்சனைகள் பெரிதாக இல்லை. அவளை நான் ரொம்ப நேசிக்கிறேன். அவளும் அப்படிதான் என்னிடம் நடந்து கொள்கிறாள். எங்கள் ரசனையும் ஒத்து போகும். ஒரே ஒரு பிரச்சனை. அது என்னவென்றால் உடலுறவில் எனக்கு ஒருநாளும் திருப்தியில்லை. அவளை குறை சொல்லவும் முடியவில்லை. படுக்கையறையில் அவள் வினோதமாக நடந்து கொள்வாள்.

இதையும் படிங்க:  நிர்வாணமாக தூங்க அடம்பிடிக்கும் கணவன்.. அதுக்கு வேலைக்கார பெண் சொன்ன விஷயம்.. குமுறும் பெண்

இரவில் செக்ஸ் வைத்துக் கொள்ள அவளை நெருங்கும்போது அவள் அதை தவிர்க்கிறாள். ஏதேனும் காரணம் சொல்லி நழுவி விடுகிறாள். என்னை அன்பாக அரவணைப்பது, முத்த மழையில் நனைப்பது என அவ்வப்போது என்னை அசரடிப்பாள். இதை கண்டு நான் அடுத்த லெவலுக்கு போய் உடலுறவை தொடங்கினால் அதற்கு மறுப்பு தெரிவிப்பார். இதனால் சில நேரம் என்னுடைய மனைவி லெஸ்பியனாக இருப்பாரோ? என சந்தேகம் எழுகிறது. அவருடைய தோழிகளுடன் பேசும் விதம் குறித்து அலசி ஆராயலாமா? என்றெல்லாம் தோன்றுகிறது. இனி நான் என்ன செய்ய வேண்டும்" என கேட்டிருக்கிறார். 

இதையும் படிங்க: 'கணவர் என் உள்ளாடைகளை அணிகிறார்'- அதை பார்த்தாலே... புலம்பும் பெண்.. எதனால் தெரியுமா?  

இந்த சிக்கலான கேள்விக்கு நிபுணர் பதில்: இதை குறித்து எங்களுக்கு எழுதியதற்கு நன்றி. இந்த குழப்பமான மனநிலை வினோதமான சிந்தனைகளை உங்களுக்கு ஏற்படுத்தலாம். நீங்கள் சொல்வதை பார்த்தால் உங்கள் மனைவிக்கு உங்களின் மீது நேசம் உள்ளது. இருவருக்கும் நட்புரீதியான தொடர்பும் உள்ளது. இது கணவன் மனைவி உறவுக்கு அவசியம் தேவையான ஒன்று.  ஆனாலும், கணவன் மனைவி இருவருக்கும் வெறும் நேசம் மட்டும் போதாது. அன்புக்கு அடுத்து காதலும், கூடவே காமமும் தேவை. வெறும் உடல்கள் இணைவதும், வெறுமனே உள்ளங்கள் மட்டும் இணைந்திருப்பதும் தாம்பத்தியத்தை முழுமையாக்காது. உடலும் உள்ளமும் இணைய வேண்டும். உங்கள் உறவில் உடல்ரீதியான நெருக்கத்திற்கு மனைவி தயங்க குறிப்பிட்ட காரணங்கள் ஏதேனும் இருக்கலாம். 

உடலுறவில் ஈடுபட உங்கள்  மனைவி தயங்குவதால் அவர் லெஸ்பியனாக இருப்பார் என நீங்கள் நினைப்பது தவறான புரிதல். லெஸ்பியனாக ஒருவர் இருப்பதை பல்வேறு காரணங்கள் நிர்ணயிக்கின்றன. பால் ஈர்ப்பை மேம்போக்காக நாம் கணிப்பது சரியாக இருக்காது. இது குறித்து உங்கள் மனைவியிடம் நேரடியாக எதையும் கேட்காதீர்கள். உடலுறவில் ஏன் அவர் நாட்டம் இல்லாமல் இருக்கிறார் என்பதை முதலில் கேளுங்கள். இதை குறித்து அவர் பேச தொடங்கிய பின்னர் அவருக்கு ஆதரவாகவே உரையாடலை கொண்டு செல்லுங்கள். ஒவ்வொரு தம்பதியும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது அவசியம். 

உங்களுடைய மனைவி லெஸ்பியனாக இருந்தால் உங்களை நெருங்குவதில் பல்வேறு சிக்கல் இருக்கும்.  குறிப்பாக உங்களை உடல்ரீதியாக தொடுவதை அவர் பெரும்பாலும் விரும்பமாட்டார். ஆனால் உங்கள் விஷயத்தில், அவர் உங்களை முத்தமிடுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். இதிலிருந்து அவர் உடலுறவு குறித்த அச்சத்தில் இருப்பதாக புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் இது குறித்து அக்கறையுடன் அன்பாக அவரிடம் பேசி பாருங்கள். இல்லையெனில் அருகில் உள்ள மனநல ஆலோசகரை சந்தியுங்கள். மனதில் உள்ள பயம் நீங்கினால் உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் தாம்பத்தியம் நன்றாகும். நலம் வாழ வாழ்த்துகள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios