மிக முக்கிய புள்ளி விவரம்..! உலகளவில் கொரோனா..! இந்தியாவின் நிலைமை..! 

உலகையே இன்று ஆட்டிப்படைக்கும் கொரோனா, இந்தியாவிலும் மெல்ல மெல்ல அதன் தாக்கத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளது.மத்திய மாநில அரசுகள் பெருமுயற்சி எடுத்து, பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து தற்போது 40 நாட்கள் வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த தருணத்தில் கொரோனாவின் தாக்கம் சமூதாய தொற்றாக மாறாமல் கட்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளது.

அதே வேளையில் மற்றொரு பக்கம் கொரோனா மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால், ஊரடங்கு இன்னும்   சில நாட்களுக்கு நீடிக்கப்படாலாமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. அவ்வாறு அதிகரித்தால் மக்கள் எப்படி பொருளாதார இழப்பை சந்திப்பார்கள்... வீட்டிலேயே எத்தனை நாட்கள் முடங்கி இருக்க முடியும் என தொடர்ந்து கேள்வி எழுகிறது 

கொரோனாவிற்கு இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாத நிலையில், மனித குலத்திற்கு இதுவரை ஏற்படுத்தி உள்ள விளைவுகள் வைத்து பார்க்கும் போது விரைவில் தடுப்பூசி கண்டுபிடித்தால் மட்டுமே இதற்கெல்லாம் ஓர் முற்றுப்புள்ளி கிடைக்க வாய்ப்பு உள்ளது என நினைக்க வைக்கிறது.


 
இந்தியாவில் கொரோனா 

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20, 471 ஆக உயர்ந்து உள்ளது.குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960  ஆகவும் உள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 652 ஆகவும் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 251 பேர்  பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

உலகளவில் கொரோனா 

உலகளவில் 26.36 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்தும், உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,36,989 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,84,186ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,17,619ஆக உள்ளது 

அமெரிக்காவில் மட்டும் கொரோனா 

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,341 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது.அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,48,717 ஆகவும், அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47,659 என்பது குறிப்பிடத்தக்கது.