டிபனுக்கு ரவையில் இப்படி ஊத்தப்பம் செய்ங்க.. ரொம்ப சூப்பரா இருக்கும்!
Rava Uttapam Recipe : இந்த பதிவு ரவையில் சுவையான ரவை ஊத்தப்பம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்று காலை உணவாக இட்லி தோசை செய்வதற்கு மாவு ஏதும் இல்லையா? வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன செய்து கொடுப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.
உங்கள் வீட்டில் ரவை இருக்கிறதா? அப்படியானால் அதில் சுவையான ஊத்தப்பம் செய்து கொடுங்கள் . முக்கியமாக இந்த ரெசிபி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது ரொம்பவே ஈசியாக செய்துவிடலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு காலை உணவாக ரவையில் ஊத்தப்பம் செய்து கொடுங்கல். அவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவு ரவையில் சுவையான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பீட்ரூட்டில் இப்படி ஒரு முறை ஊத்தப்பம் செய்ங்க.. டேஸ்ட் வேற லெவல்..!
ரவை ஊத்தப்பம் செய்ய தேவையான பொருட்கள் :
ரவை - 2 கப்
சமையல் சோடா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 7 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
துருவிய கேரட் - 1 சின்னது
கேப்ஸிகம் - 1 சின்னது (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
புதினா - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது)
இதையும் படிங்க: 'ஓட்ஸ் ஊத்தப்பம்' சர்க்கரை நோயாளிகளுக்கு பெஸ்ட் காலை உணவு இது... ரெசிபி இதோ..!
செய்முறை :
ரவை ஊத்தப்பம் செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் ரவை, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஊத்தப்பம் மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள் இந்த மாவை சுமார் 20 நிமிடம் அப்படியே வைக்கவும்.
இப்போது ஒரு தவாவை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் தடவி கலக்கி வைத்த மாவை ஒரு கரண்டி ஊற்றவும். மாவு ஓரளவு வெந்த பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த காய்கறிகளை அதன் மேல் தூவி மெதுவாக அழுத்தவும். மாவின் ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் உற்றவும். பிறகு இரண்டு பக்கமும் திரட்டி போட்டு எடுக்கவும் அவ்வளவுதான் சுவையான ரவை ஊத்தப்பம் ரெடி. இந்த ரவை ஊத்தப்பத்துடன் நீங்கள் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது கொத்தமல்லி சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D