Asianet News TamilAsianet News Tamil

சொகுசு திரையரங்குகளில் உள்ள "சீட்டு"-களை கடித்து துவம்சம் செய்த எலிகள்..! கண்ணீர் விடும் உரிமையாளர்கள்!

 ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப் படும் எனவும் தெரிய வந்து உள்ளது. இதற்கு முன்னதாக அனைத்து மாநில முதல்வர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு நீட்டிற்பிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று தெரிவித்து இருந்தார்
rat bites all the seats of cinema theatre in chennai
Author
Chennai, First Published Apr 13, 2020, 4:09 PM IST
சொகுசு திரையரங்குகளில் உள்ள "சீட்டு"-களை கடித்து துவம்சம் செய்த எலிகள்..! கண்ணீர் விடும் உரிமையாளர்கள்!

கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வந்ததால் மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஏப்ரல் பதினான்காம் தேதியான நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிய உள்ள நிலையில், நாளை காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துவார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதன் மூலம் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப் படும் எனவும் தெரிய வந்து உள்ளது. இதற்கு முன்னதாக அனைத்து மாநில முதல்வர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு நீட்டிற்பிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று தெரிவித்து இருந்தார். மேலும் அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்றே குறிப்பிட்டு இருந்தனர். அதற்கு காரணம் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மட்டுமே...
rat bites all the seats of cinema theatre in chennai

இந்த ஒரு நிலையில் கொரோனா பரவல் தடுப்பதற்காக ஏற்கனவே பாதுகாப்பு கருதி ஷாப்பிங் மால்கள் வணிக வளாகங்கள், மக்கள் அதிகமாக கூட கூடிய இடங்கள், என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதாவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே இந்த அனைத்தும் மூடப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
rat bites all the seats of cinema theatre in chennai

இந்நிலையில் சென்னையில் பிரபலமான ஷாப்பிங் மால் ஒன்றில் உள்ள திரையரங்குகள் இரண்டு வாரங்களுக்கு மேல் மூடப்பட்டு இருந்ததால் அதனை பராமரிக்க அரசின் அனுமதி பெற்ற நிர்வாகிகள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். உள்ளே சென்று பார்த்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் விஷயமாக அனைத்து சீட்டுகளையும் எலிகள் தாறுமாறாக கடித்து, பஞ்சு பறந்து உள்ளது. இதனை சரிப்படுத்த பல லட்சம் ரூபாய் செலவாகும் என புலம்புகின்றனர் உரிமையாளர்கள்.
rat bites all the seats of cinema theatre in chennai

தியேட்டரில் நடந்தது போலவே நாடு முழுவதும் உள்ள பல்வேறு தியேட்டர்களிலும் இதேபோன்று சம்பவம் நடைபெற வாய்ப்பு இருக்கலாம் என அஞ்சுகின்றனர். கொரோனா பிரச்சனைக்கு முடிவுக்கு வராத நிலையில் இன்னும் எந்தெந்த ரூபத்தில் இன்னல்கள் மக்களுக்கு வருமோ அனைவரும் புலம்ப தொடங்கி உள்ளனர் 
Follow Us:
Download App:
  • android
  • ios