இஸ்லாமியர்களின் மிகவும் புனிதமான மாதமாக ரமலான் மாதம் கருதப்படுகிறது.
ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன் மற்றும் சூரிய மறைவிற்கு பிறகு மட்டும் உணவருந்தி விட்டு, பகல் பொழுதில் உணவு, தண்ணீர் ஆகியவற்றை தவிர்த்து 30 நாட்களும் நோன்பு கடைபிடிக்கப்படுவது வழக்கம். இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான இரண்டு பண்டிகைளில் ஒன்று ரமலான் பண்டிகை.
அந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன் 29 அல்லது 30 நாட்கள் கொண்டப்படும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து அதன் அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுவதுதான் நோன்பு பெருநாள் எனும் ஈகை திருநாள். இந்த ரமலான் மாதத்தில் உங்களது தாக்கத்தை தீர்க்க அருமையான உணவு ஒன்று இருக்கிறது.

அதன் பெயர் சவுதி ஷாம்பெயின் ஆகும். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சவுதி ஷாம்பெயின் என்பது ஒரு மது அல்லாத பானமாகும். இது சவுதி அரச குடும்பத்தாருக்கும் மிகவும் பிடித்தது என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த உணவுப் பதிவர் ஸுப்தா மாலிக் என்பவர் (Zubda Malik) என்பவர் இன்ஸ்டாகிராமில் (Instagram) கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்டவரால் பார்க்கப்பட்டு வருகிறது.
பாரம்பரியமாக ஸ்ப்ரைட் அல்லது 7UP உடன் தயாரிக்கப்பட்ட இந்த புத்துணர்ச்சியூட்டும் பானம் மத்திய கிழக்கு இஃப்தார் மேசையில் பிரதானமாக உள்ளது. இதுபற்றி இன்ஸ்டாவில் எழுதிய Zubda malik, “சவுதி ஷாம்பெயின் என்பது உணவகங்கள் மற்றும் பார்ட்டிகளில் வழங்கப்படும் ஒரு பிரபலமான பானமாகும். இது ஒரு பழம் கலந்த பானமாகும். இது சிறிது புதினா மற்றும் எலுமிச்சை மற்ற சுவைகளுடன் கூடியது. இதை எந்த நேரத்திலும் உடனடியாக செய்து பரிமாறலாம். பரிமாறும் முன் சோடா அல்லது 7அப் ஊற்றவும்” என்கிறார்.
தேவையான பொருட்கள் :
பச்சை ஆப்பிள், சிவப்பு ஆப்பிள், எலுமிச்சை, புதினா, ஆரஞ்சு, தண்ணீர், 1/2 லிட்டர் 7அப்/ ஸ்பிரைட், 1 லிட்டர் ஆப்பிள் சாறு ஆகியவை ஆகும்.
இதையும் படிங்க: சுகர் நோயாளிகளே! இந்த தவறை மறந்தும் பண்ணாதீங்க..1 நிமிஷத்துல சர்க்கரை அளவு எகிறிடும்
