தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். மகேஷ் பாபு, ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலருக்கும் நாயகியாக நடித்துள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங், தமிழில் "தடையற தாக்க", "தீரம் அதிகாரம் ஒன்று", "என்ஜி.கே", "ஸ்பைடர்" ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர். தற்போது, தமிழில் கமல் நடித்து வரும் 'இந்தியன் 2', சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'அயலான்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

அக்டோபர் 31 லேடீஸ் நைட் என்ற தமிழ், தெலுங்கு படத்தை முடித்துள்ளார்.இவை தவிர அட்டாக், ரன்வே 34, தேங்க் காட், டாக்டர் ஜி, மிஷன் சின்ட்ரெல்லா உள்பட எட்டு இந்திப் படங்கள் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளிவர உள்ளன.
ரகுல் ப்ரீத் சிங் தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியும் காதலித்து வருகிறார்கள். இது தொடர்பான தகவலை, ரகுல் ப்ரீத் சிங் அக்டோபர் மாதம் தனது பிறந்தநாளன்று, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இவர்கள் திடீரென ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சிலர் வதந்தி பரப்ப, அது வைரலானது. அதனைத் தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் வதந்தியாளர்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்தார்.
இவர்கள் திடீரென ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சிலர் வதந்தி பரப்ப, அது வைரலானது. அதனைத் தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் வதந்தியாளர்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்தார்.
"நான் வெளிப்படையானவள். என்னுடைய காதலை பகிரங்கமாக அறிவித்தது போல் திருமணத்தையும் அறிவிப்பேன். அந்த துணிச்சல் என்னிடம் இருக்கிறது. எதையும் யாரிடமும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. இதுபோன்ற முட்டாள் தனமான வதந்திகளை நான் பெரிதுப்படுத்துவதில்லை" என்று கூறியிருந்தார்.
ரகுல் ப்ரீத் சிங்ன் இஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது, கொடுத்துள்ள போஸ் ஹாட்டாக பரவி வருகிறது. அந்த புகைப்படம் பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
