Asianet News TamilAsianet News Tamil

ரக்‌ஷா பந்தனுக்கு பிறகு ராக்கியை அசால்டா தூக்கி வீசாதீங்க.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ரக்‌ஷ பந்தன் நாளில், தீய விஷங்களில் இருந்து சகோதர்களை காக்கவும், அவர்களின் நீண்ட ஆயுள் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்காக சகோதரிகள் தங்கள் சகோதர்களின் கையில் ராக்கியை கட்டுவர்.

Raksha Bandhan 2023 : Dont throw rakhi after Raksha Bandhan.. Do you know what to do? Rya
Author
First Published Aug 30, 2023, 10:48 AM IST

சகோதர - சகோதரி இடையேயான புனிதமான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் ரக்சா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த இந்த ஆண்டுக்கான ரக்‌ஷா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஹிந்தி காலண்டரின் படி ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தீய விஷங்களில் இருந்து சகோதர்களை காக்கவும், அவர்களின் நீண்ட ஆயுள் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்காக சகோதரிகள் தங்கள் சகோதர்களின் கையில் ராக்கியை கட்டுவர்.

பதிலுக்கு சகோதரர்களும் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக சகோதரிகளுக்கு பரிசு பொருட்களை வழங்குவர். எனினும் ராக்கியை அகற்றுவதற்கான சில வழிகாட்டுதல்கள் உள்ளன. புனிதமான ராக்கியை அகற்ற என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம். 

ரக்ஷாபந்தன் அன்று தவறுதலாக இந்த பரிசை உங்கள் சகோதரிக்கு கொடுக்காதீர்கள்..உறவு மோசமடையும்...

ரக்‌ஷா பந்தனுக்குப் பிறகு உங்கள் ராக்கியை என்ன செய்வது?

ராக்கி வெறும் ஃபேஷன் பொருளாக இருப்பதை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது; இது ஒரு பாதுகாப்பு கயிறாகும், சகோதரனைப் பாதுகாக்க தெய்வீக சக்திகளால் ஆசீர்வதிக்கப்பட்டது. மகாபாரதத்தில், திரௌபதி கிருஷ்ணரின் விரலில் காயம்பட்டபோது தனது சேலையின் ஒரு கிழித்து கட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரக்‌ஷா பந்தன் நாளீல்  சகோதரிகள் கட்டும் ராக்கி கட்டும் பாரம்பரியம் தொடங்கியது. இது பாதுகாப்பிற்காக தெய்வீக ஆசீர்வாதமாக நம்பப்படுகிறது.

எனவே ராக்கியை அகற்றிய பிறகு, அதை தூக்கி எரியக்கூடாது. அதற்கு பதிலாக, ராக்கியை ஒரு சிவப்பு துணியில் போர்த்தி, தனிப்பட்ட உடைமைகளை வைத்திருக்கும் ஒரு இடத்தில் வைக்க வேண்டும். மேலும் அந்த இடத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். அடுத்த ஆண்டு புதிய ராக்கி கட்டும் நேரம் வரும்போது, ​​பழைய ராக்கியை பொறுப்புடன் அப்புறப்படுத்துங்கள். நீங்கள் அதை ஒரு நதி அல்லது குளத்தில் விடலாம் அல்லது மரத்தின் வேர்களுக்கு அருகில் புதைக்கலாம். புதிய ராக்கி கட்டிய பிறகும், அதை துணியில் சுற்றி, சேமித்து வைக்கும் அதே நடைமுறையை பின்பற்றவும்.

இருப்பினும், ராக்கியை அகற்றும் போது தவறுதலாக உடைந்து விட்டால், அதை உடனடியாக ஆற்றில் அப்புறப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதை வீட்டிற்குள் வைக்காமல் இருப்பது நல்லது. ராக்கியைப் பாதுகாக்கும் முறையான நடைமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலம், உடன்பிறப்புகளுக்கிடையேயான பந்தம் பாதுகாக்கப்படுகிறது. கூடுதலாக, இந்த நடைமுறை வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios