சூப்பர் ஸ்டார் ரஜினி, மோகன்லால் உள்ளிட்ட பல பிரபலங்களின் மெழுகு சிலை களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் சுனில்.

திருவனந்தபுரம் அருகே உள்ள கோட்டை என்ற இடத்தில். மெழுகு சிலைகளை அமைத்து மியூசியம் ஒன்றை உருவாக்கியுள்ளார் சுனில். இந்த மியூசியத்தில் தற்போது பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர மோகன்லால், சல்மான்கான், கிரிக்கெட் வீரர் சச்சின், கரீனா கபூர், நடிகர் ரஜினிகாந்த் என 27 பிரபலங்களின் சிலைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த சிலைகளை பார்க்கும் போது நேரில் பார்ப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது... மேலும் மிகவும் தத்ரூபமாகவும் உயிரோட்டமாகவும் காணப்படுகின்ற இந்த சிலைகளை காண அவ்வூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக ரஜினி மற்றும் மோகன்லாலின் சிலைகள் அருகே நின்று கொண்டு செல்ஃபி எடுப்பதும், விதவிதமான போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கொண்டு வருகின்றனர் சுற்றுலா பயணிகள். மேலும் இதற்கு அடுத்தகட்டமாக ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் அடிப்படையிலான குறைந்தபட்சம் 50 சிலைகளை ஆவது உருவாக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார் சுனில். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது