வெறும் 10 ஓட்டு மட்டுமே பெற்று ஊராட்சி மன்ற தலைவரான ராஜேஸ்வரி..! என்ன ஒரு அதிசயம்...! 

திருச்செந்தூர் அருகே உள்ள பிட்சிவிளை ஊராட்சியில் வெறும் பத்து வாக்குகளை மட்டுமே பெற்று பெண் ஒருவர் ஊராட்சிமன்ற தலைவரான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருச்செந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பிச்சிவிளை கிராமம். இங்கு மொத்தம் ஆறு வார்டுகள் உள்ளன. வாக்காளர்கள் பொருத்தவரையில் 785. இதில் 6 பேர் மட்டுமே பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பட்டியல் இடத்திற்கு சுழற்சிமுறையில் தலைவர் பதவிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர்மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். இதன் காரணமாக 6 வார்டுகளிலும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் பட்டியல் இனத்தை சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் சுந்தராட்சி இருவர் மட்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

கடந்த 27ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது பட்டியல் இனத்தில் இருந்து 6 பேரும், மற்ற சமுதாயத்தில் இருந்து 7 பேர் என மொத்தம் 13 பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர். இதில் 10 வாக்குகள் பெற்று ராஜேஸ்வரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சுந்தராட்சிக்கு 2 வாக்குகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் ஒன்று செல்லாத வாக்கு என்பதால் சுந்தராட்சி ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இங்கு வார்டு உறுப்பினர்கள் யாரும் இல்லை. எனவே இந்த பதவிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது கூடுதல் தகவல்