ராஜிவ் நம்பியாருக்கு குவியும் பாராட்டு..! 

Global entrepreneur council வருடந்தோறும் நடத்தும் நிகழ்ச்சியில் திறமையான  தொழில் அதிபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். 

அந்த வகையில், இந்த ஆண்டு Global entrepreneur council நடத்திய "ஏசியா பசிபிக் பிசினஸ் அவார்டு" - கான  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் "THE CEO OF THE YEAR 2019 " கான விருது  ராஜு நம்பியார் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஹலோ எப்.எம் மற்றும் மலர் பப்ளிகேஷன்ஸ் CEO வாக உள்ள இவரது திறமையை பாராட்டி, இந்த உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட உள்ளது. 

இதற்கு முன்னதாக தந்தி தொலைக்காட்சி மற்றும் தந்தி செய்தித்தாள்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலராக ராஜிவ் நம்பியார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.